டிசி-யின் மெகா திட்டம்:


உலக அளவில் சூப்பர் ஹீரோக்களின் கதை என்றாலே அனைவரது நினைவிற்கும் வருவது, அமெரிக்காவை சேர்ந்த  மார்வெல் மற்றும் டிசி நிறுவனங்கள் தான். காமிக்ஸ் புக் அடிப்படையில் மார்வெலை காட்டிலும் டிசி நிறுவனம் அதிகப்படியான ரசிகர்களை கொண்டிருந்தாலும், 2008ம் ஆண்டு மார்வெல் நிறுவனம் திரைப்படங்களை வெளியிட தொடங்கி தற்போது பிரமாண்ட வளர்ச்சியை பெற்றுள்ளது. ஆனால், டிசி நிறுவனமோ திரைப்பட உலகில் தனக்கான நிலையான இடத்தை உருவாக்க முடியாமல் தவித்து வருகிறது. ஸ்னைடர் வெர்ஸ் என ஒன்று தொடங்கப்பட்டாலும், மோசமான நிர்வாக காரணங்களால் அது தோல்வியையே சந்தித்தது. அதைதொடர்ந்து தான், பிரபல இயக்குனர் ஜேம்ஸ் கன் டிசி நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரிகளில் ஒருவராக நியமிக்கப்பட்டார். தற்போது அவர், சுமார் அடுத்த 10 ஆண்டுகளுக்கான டிசி திரைப்படங்கள், வெப் சீரிஸ் மற்றும் அனிமேஷன் சீரிஸ் தொடர்பான திட்டங்களை வகுத்து வருகிறார். அதன் முதற்கட்டத்தின் சில அப்டேட்களை ஜேம்ஸ் கன் வெளியிட்டுள்ளார்.


டிசியின் முதற்கட்டம் என்ன?


டிசி-யின் முதற்கட்டம் தொடர்பாக ஜேம்ஸ் கன் வெளியிட்டுள்ள டிவிட்டர் வீடியோ பதிவில், ”முதற்கட்டத்தில் வெளியாகும் அனைத்து திரைப்படங்கள், சீரிஸ்கள் மற்றும் அனிமேஷன் நிகழ்ச்சிகள் அனைத்தும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையதாக இருக்கும். நடப்பு ஆண்டில் வெளியாக உள்ள சஷாம், தி பிளாஷ்-2, அக்குவா மேன் ஆகியவற்றில் எந்த மாற்றமும் இருக்காது. மேட் ரீவ்ஸ் பேட்மேன் திரைப்படம் தனி யூனிவர்ஸாக தொடரும். தனது தலைமையிலான புதிய டிசி யூனிவர்ஸின் முதல் திரைப்படம், 2025ம் ஆண்டில் தான் வெளியாகும். தனது மொத்த திட்டத்தின் முதற்கட்டம், காட்ஸ் & மான்ஸ்டர்ஸ் என அழைக்கப்படும்” என குறிப்பிட்டுள்ளார்.






காட்ஸ் & மான்ஸ்டர்ஸில் இடம்பெற உள்ள சீரிஸ்கள்:


சூப்பர் மேன்: லெகசி :


புதிய சூப்பர் மேன் திரைப்படத்திற்கான கதையை ஜேம்ஸ் கன் எழுதி வருகிறார்.  ஜூலை 11, 2025 அன்று சூப்பர்மேன்: லெகசி திரைப்படம் வெளியாக உள்ளது. இது ஒரு மூலக் கதையாக இருக்காது, ஆனால் கிளார்க்கின் சூப்பர் ஹீரோ வாழ்க்கையை மனிதர்களுடன் சமநிலைப்படுத்துவதற்கான போராட்டத்தில் இந்த திரைப்படம் கவனம் செலுத்தும். கருணை பழமையானது என்று நம்பும் உலகில் சூப்பர்மேன் கருணையின் கலங்கரை விளக்கமாக இருப்பதையும் கதை ஆராயும்.


தி அதாரிட்டி : 


வைல்ட்ஸ்டார்ம் கதாபாத்திரங்களை அடிப்படையாகக் கொண்ட திரைப்படம் தி அதாரிட்டி கோடிட்டுக் காட்டுகிறார். ​​நல்ல நோக்கங்களைக் கொண்ட ஆன்டிஹீரோக்களை உள்ளடக்கிய, ஒரு குழுவை மையமாக கொண்டு இந்த திரைப்படம் உருவாக உள்ளது. படத்தின் வெளியீட்டு தேதி எதுவும் அறிவிக்கப்படவில்லை.


தி பிரேவ் அண்ட் தி போல்ட்: 


பேட்மேன் மற்றும் அவரது மகன் ராபினை மையப்படுத்தி இந்த கதை திரைப்படம் உருவாக உள்ளது.  கிராண்ட் மோரிசனின் பேட்மேன் கதையை அடிப்படையாகக் கொண்டு, டாமியன் வெய்ன் தனது மகன் என்பதை புரூஸ் கண்டுபிடிப்பதைக் கதை அலச உள்ளது. இதில் நடிக்க உள்ள நடிகர்கள் தொடர்பான தகவல் எதுவும் வெளியாகவில்லை. ஆனால், ஏற்கனவே பேட்மேனாக நடித்தவர்கள் புதிய படத்தில் இடம்பெறமாட்டார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.


சூப்பர் கேர்ல்: வுமன் ஆஃப் டுமாரோ: 


தி கேர்ள் ஆஃப் ஸ்டீல் கதாபாத்திரம் தனது சொந்த தனித் திரைப்படத்தைப் பெற உள்ளது. டாம் கிங் அண்மையில் எழுதிய கதையை அடிப்படையாக கொண்டு இந்த திரைப்படம் உருவாக உள்ளது. சூப்பர்மேன் பூமியில் அன்பான பெற்றோருடன் வளர்க்கப்பட்டபோது, ​​​​சூப்பர் கேர்ல் கிரிப்டனின் ஒரு துண்டில் தங்கியிருந்து எப்படி சிரமப்பட்டார், பின்பு எப்படி தன்னை மேம்படுத்திக் கொண்டார் என்பதை இந்த திரைப்படம் விளக்க உள்ளது.


ஸ்வாம்ப் திங்:


ஸ்வாம்ப் திங்கின் இருண்ட தோற்றக் கதையை ஆராயும் திரைப்படத்தில் டிசி ஸ்டுடியோஸ் பணியாற்றி வருகிறது.


காட்ஸ் & மான்ஸ்டர்ஸில் இடம்பெற உள்ள சீரிஸ்கள்:


கிரியேட்சர் கமாண்டோஸ்: 


இது ஒரு அனிமேஷன் தொடராகும்.  இந்தத் தொடருக்காக ஜேம்ஸ் கன் ஏற்கனவே ஏழு எபிஷோட்களை எழுதியுள்ளார்.


வாலர் :


ஏற்கனவே அறிவிக்கப்பட்டதை போன்று வயோலா டேவிஸ் நடிப்பில்  அமண்டா வாலர் ஸ்பின்ஆஃப் தொடர் உருவாக உள்ளது.  பீஸ்மேக்கர் சீசன் 1 மற்றும் 2 க்கு இடையில் நடப்பது போன்று இந்த கதைக்களம் அமைக்கப்பட உள்ளது.


லாண்டெர்ன்ஸ் :


இது கிரெக் பெர்லாண்டியின் கிரீன் லான்டர்ன் தொலைக்காட்சி நிகழ்ச்சியாக இருக்குமா என்பது தெளிவாகத் தெரியவில்லை என்றாலும், புதிய லாண்டெர்ன்ஸ்  தொடர் ஹால் ஜோர்டான் மற்றும் ஜான் ஸ்டீவர்ட்டை மையமாகக் கொண்டிருக்கும்.


பாரடைஸ் லாஸ்ட் :


இது கேம் ஆஃப் த்ரோன்ஸ் பாணியில் ஒரு வொண்டர் வுமன் ப்ரீக்வல் சீரிஸ் ஆகும். டயானா பிரின்ஸ் காலத்திற்கு முன்பு தெமிசிராவின் தோற்றத்தை மையமாகக் கொண்டு, தெமிஸ்கெராவில் ஆடப்படும் அரசியல் விளையாட்டு மற்றும் அதிகாரத்தைப் பெற பெண்களின் சமூகம் என்ன செய்கிறது என்பதை இந்த கதை விளக்க உள்ளது.


பூஸ்டர் கோல்ட் :


எதிர்காலத்தை சேர்ந்த தொழில்நுட்ப சூப்பர் ஹீரோவை மையமாகக் கொண்ட இந்த தொடர் உருவாக உள்ளது. அடுத்தடுத்து வெளியாக உள்ள இந்த திரைப்படங்கள் மற்றும் சீரிஸ்கள் மூலம், டிசி நிறுவனம் புத்துயிர் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.