கடலூரில் நடைபெற்ற ஜெய்லர் படப்பிடிப்பில் கலந்துகொண்ட நடிகர் ரஜினிகாந்தின் புகைப்படம், வீடியோக்கள் வெளியாகியுள்ளன.
அண்ணாத்த படத்துக்குப் பிறகு கோலிவுட் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் ஜெய்லர் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படம் 2023ஆம் ஆண்டு கோடை ஸ்பெஷலாக திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த ஆகஸ்ட் 22 ஆம் தேதி ஜெயிலர் படப்பிடிப்பு தொடங்கி வேகமாக நடைபெற்று வரும் நிலையில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், படப்பிடிப்பு தள புகைப்படங்கள் என அவ்வப்போது ரஜினிகாந்தின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்களை மகிழ்வித்து வருகின்றன.
அந்த வகையில் முன்னதாக கடலூரில் நடைபெற்ற ஜெய்லர் படப்பிடிப்பில் கலந்துகொண்ட ரஜினிகாந்தின் புகைப்படம், வீடியோக்கள் வெளியாகி இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றன.
மேலும் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் படப்பிடிப்பு தளத்தில் இருந்து ரசிகர்களை சந்தித்து மகிழும் புகைப்படமும் வெளியாகி உள்ளது.
அனிருத் இசையமைக்கும் இப்படத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணன், தரமணி படத்தில் நடித்த வசந்த் ரவி, நடிகர் யோகிபாபு, மலையாள நடிகர் விநாயகன் உள்ளிட்டோர் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக நடிகர் ரஜினிகாந்த் தனது வீட்டில் இயல்பாக ஃபோன் பார்க்கும் புகைப்படத்தை அவரது மகள் ஐஸ்வர்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இந்தப் படமும் இணையத்தில் வைரலானது குறிப்பிடத்தக்கது.