ஜெயிலர் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சன் பிச்சர்ஸ் தயாரிப்பாளர் கலாநிதி மாறன் இயக்குநரை நேரில் பாராட்டி, செக் வழங்கியுள்ளார்.


நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த ஆக்ஸ்ட் 10ஆம் தேதி ரிலீசான ஜெயிலர் திரைப்படம் , கோலிவுட்டின் மெகா ஹிட் திரைப்படங்களுள் ஒன்றாக உருவெடுத்துள்ளது. கடந்த மூன்று வாரங்களில் வசூலை வாரிக் குவித்து சுமார் 600 கோடி வசூலை ஜெயிலர் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில், கோலிவுட்டின் பல பாக்ஸ் ஆஃபிஸ் சாதனைகளை இப்படம் ப்ரேக் செய்து வருகிறது.


இந்நிலையில், சன் பிச்சர்ஸ் நிறுவனர் கலாந்தி மாறன் இன்று இயக்குநர் நெல்சனை நேரில் அழைத்துப் பாராட்டியுள்ளதுடன் அவரது சம்பளத் தொகையையும் செக்காக வழங்கியுள்ளார். இது குறித்த புகைப்படங்களை சன் பிச்சர்ஸ் நிறுவனம் தன் அதிகாரப் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.


 






நேற்று இதேபோல் நடிகர் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து பாராட்டிய கலாநிதி மாறன் அவருக்கு பூங்கொத்து, செக் தொகை வழங்கினார், மேலும் ரஜினிகாந்துக்கு விலை உயர்ந்த சொகுசு காரான BMW X7 காரை வழங்கும் வீடியோவும் இன்று காலை இணையத்தில் பகிரப்பட்டது.


அதனைத் தொடர்ந்து தற்போது நெல்சனுக்கு செக் கொடுக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது.