ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வரும் ரஜினிகாந்த் மற்றும் மோகன்லால் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது. இந்த திரைப்படத்தை கோலமாவு கோகிலா, டாக்டர் மற்றும் பீஸ்ட் ஆகிய திரைப்படங்களை இயக்கிய, நெல்சன் இயக்க அனிருத் இசையமைத்து வருகிறார். இந்த படத்திற்கான புரோமோ ஏற்கனவே வெளியாகி ரசிகர்களை கவர்ந்த நிலையில், வரும் தீபாவளிக்கு ஜெயிலர் திரைப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.






சன் பிக்சர்ஸ் தயாரிப்பு:


சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். அண்ணாத்த படத்திற்கு பிறகு நடிகர் ரஜினிகாந்தும், பீஸ்ட் படத்திற்கு பிறகு இயக்குநர் நெல்சன் திலீப்குமாரும் சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்காக ஒன்றிணைந்துள்ளனர். இந்த படத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணன், மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார், தரமணி படத்தில் நடித்த வசந்த் ரவி, நடிகர் யோகிபாபு, மலையாள நடிகர் விநாயகன் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். ஜெயிலர் படத்தின் 70 சதவிகித படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில் நேபாளத்தில் நடைபெறும் படப்பிடிப்புக்காக ரஜினிகாந்த் சில தினங்கள் முன்பு நேபாளம் சென்ற வீடியோ  வைரலானது.