Jailer Audio Launch: நடிகர் ரஜினியின் ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழா நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.
அதில் ஒவ்வொரு சிறப்பு விருந்தினர்களும் படத்தில் நடித்தவர்களும் சூப்பர் ஸ்டார் ரஜினியுடனான தங்களது அனுபவத்தை தெரிவித்துவந்தனர். அதில், வி.டி.வி. கணேஷ் பேசும் போது, தளபதி விஜய்க்குப் பிறகு படப்பிடிப்பு தளத்தில் மிகவும் நாகரீகமாக நடந்துகொள்பவர் நடிகர் ரஜினி என்பது போன்ற கருத்தைக் கூறியுள்ளார்.
இதனை சற்றும் எதிர்பார்க்காத ரஜினி ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். மேலும், விஜய் ரசிகர்களோ இதனைக் கொண்டாடி வருகின்றனர். இதனால் சமூக வலைதளத்தில் ரஜினி மற்றும் விஜய் ரசிகர்கள் சண்டையிட்டு வருகின்றனர்.
ஜெயிலர் திரைப்படம் ஆகஸ்ட் 10-ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ள நிலையில் இப்படத்தின் ஆடியோ லாஞ்ச் இன்று சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகிறது.
இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள 'ஜெயிலர்' திரைப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.