விநாயகன்
தமிழில் விஷால் நடித்த திமிர் படத்தின் மூலம் கவனமீர்த்தவர் நடிகர் விநாயகன். தொடர்ந்து பல முக்கியமான படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் வந்தபோதும் அவற்றில் அவர் நடிக்கவில்லை. கெளதம் மேனன் இயக்கிய துருவ நட்சத்திரம் படத்தில் நடித்துள்ளார். ரஜினியின் ஜெயிலர் படத்தில் இவர் நடித்த வர்மண் கதாபாத்திரம் ரசிகர்களால் பரவலாக பேசப்பட்டது.
தொடர் சர்ச்சையில் சிக்கும் விநாயகன்
சிறந்த நடிகர் என அனைவராலும் பாராட்டப்பட்டாலும் பொது வாழ்க்கையில் தொடர்ச்சியாக பல சர்ச்சைகளில் சிக்கி வருகிறார் விநாயகன். முன்னதாக தனது விமான நிலையத்தில் சக பயணாளியிடம் தகாத முறையில் பேசி ஒருமுறை சர்ச்சையில் மாட்டினார். கடந்த ஆண்டு ஹைதராபாதில் குடி போதையில் விமான நிலையத்தில் சட்டையை கழற்றி அமர்ந்து நிலைய நிர்வாகிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் அவர் ஹைதராபாத் போலீஸால் கைது செய்யப்பட்டு பின் விடுவிக்கப்பட்டார். தற்போது குடி போதையில் தனது பக்கத்து வீட்டுக்காரர்களுடன் விநாயகன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
வேட்டி நழுவியதும் தெரியாமல் போதை
தனது அடுக்குமாடி குடியிருப்பின் பால்கணியில் நின்றுகொண்டு இன்னொரு வீட்டில் இருப்பவர்களுடன் விநாயகன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார். பின் தனது வேட்டியை சரியாக கட்ட முயற்சிக்கு, அவர் தடுமாறி தரையில் விழுகிறார். அவரது வேட்டி நழுவியதை கூட கண்டுகொள்ளாத அளவு அவர் போதையில் இருப்பதை நம்மால் பார்க்க முடிகிறது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் விநாயகன் எதிராக பலர் கருத்து தெரிவித்து வருகிறார்கள். நடிகர் என்றால் இவர் செய்வதை எல்லாம் பொறுத்துகொள்ள வேண்டுமா ? இவரை கைது செய்ய வேண்டும் என பலர் அவருக்கு எதிராக தங்கள் கருத்தை தெரிவித்து வருகிறார்கள்