தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதை களத்தை தேர்ந்தெடுத்து கவனம் ஈர்ப்பவர் இயக்குநர் வசந்தபாலன். இவர் இயக்கிய வெயில், அங்காடித் தெரு, அரவான், காவியத் தலைவன் உள்ளிட்ட படங்கள் ரசிகர்கள் மற்றும் சினிமா விமர்சகர்களிடம் பாராட்டை பெற்றது.


அவர் கடைசியாக 2014ஆம் ஆண்டு காவியத் தலைவன் படத்தை இயக்கினார். நீண்ட இடைவெளிக்கு பின்னர் அவர் தற்போது இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷை கதாநாயகனாக வைத்து ஜெயில் படத்தை இயக்கியிருக்கிறார்.




ஜிவிக்கு ஜோடியாக அபர்ணதி நடிக்க ராதிகா சரத்குமார், ரவி மரியா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜிவி இசையில் பாடலாசிரியர் கபிலன் எழுதிய காத்தோடு காத்தானேன் பாடல் சில மாதங்களுக்கு முன் வெளியாகி ரசிகர்களின் ஃபேவரைட்டாக இருக்கிறது. அதேபோல் தெருக்குரல் அறிவு வரிகளில் சமீபத்தில் வெளியான நகரோடி பாடலும் பெரும் வரவேற்பை பெற்றது.


 






பாடல்கள் மட்டுமின்றி படத்தின் டீசர் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை பல மடங்கு அதிகரித்துள்ளது. வெளியீட்டுக்கு தயாராகி இரண்டு வருடங்களாக காத்திருக்கும் ஜெயில் படத்தை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் வாங்கி அந்நிறுவனம் வெளியிட இருக்கிறது.


 






இந்நிலையில் ஜெயில் படம்  டிசம்பர் ஒன்பதாம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண