AMG கார்களைப் பற்றிப் பேசும்போது, பெரிய ரக SUVக்கள் தான் நம் மனதில் வந்து செல்லும். ஆனால், அதே சிறப்பம்சங்களை வடிவில் சிறிய ரக காரில் எப்படிச் சேர்ப்பது என்பதைத் தெரிந்து உருவாக்கப்பட்டது தான் மெர்சிடீஸ்-AMG A 45 S 4MATIC+. இந்த்க் காரை நாட்ராக்ஸ் (NATRAX ) அதி வேக ஸ்பீட் டெஸ்ட் ட்ராக்கில் சோதித்துள்ளனர்.


NATRAX என்றால் என்ன?


3000 ஏக்கர் நிலப்பரப்பில் பரந்து விரிந்துள்ள நேட்ராக்ஸ், ஹை ஸ்பீட் டெஸ்டிக் டிராக் கொண்டுள்ளது. 11.3 கி.மீ நீளம் கொண்டது. இதுதான் ஆசியாவிலேயே மிகவும் நீளமான ஹை ஸ்பீட் டெஸ்டிக் டிராக் என்பதும் உலகின் 5வது மிகப்பெரிய ஹை ஸ்பீட் டெஸ்டிக் டிராக் என்பதும் குறிப்பிடத்தக்கது. இங்கே 14 வகையான டெஸ்டிங் டிராக்குகள் உள்ளன. NATRAX உலகிலேயே சிறந்த டெஸ்டிங் லேப்களையும் கொண்டுள்ளது. இங்கு 14 விதமான டெஸ்டிங் லேப்கள் உள்ளன. ஹை ஸ்பீட் டெஸ்டிக் டிராக்கில் (HSTயில்) வாகனங்கள் 375 கி.மீ வேகத்தில் செல்லக்கூடும். நீளமான பேராபோலிக் வளைவகள் உள்ளன. 


செயல்திறன்


AMG A 45 S 4MATIC+ ரக கார் ஏ கிளாஸ் குடும்பத்தைச் சேர்ந்தது. இதன் உருவத்தைப் பார்த்து தரத்தை நிர்ணயிக்காதீர்கள். இன்ஜின் செயல்திறனைப் பார்த்து தரத்தை முடிவு செய்யுங்கள். 2.0 லிட்டர் டர்போ சார்ஜ்ட் 4 சிலிண்டர் மோட்டார் உள்ளது. 415 bhp, 6750 rpm  இவற்றின் சிறப்பம்சம். மேலும் இதன் டார்க் வேல்யூ  5,000-5,250 rpm என்றளவில் உள்ளது. 8-speed DCT AMG கியர் பாக்ஸ் இந்த காருக்கான வலிமையைத் தருகிறது.


AMG A 45 S  ஹை ஸ்பீட் டெஸ்டிங் டிராக்கில் மிகச் சிறப்பாக சோதனையைக் கடந்தது. 250 கி.மீ வேகத்தில் பேரபோலிக் வளைவில் சிறப்பாகப் பயணித்தது. இந்த  S வெர்சனில் கூடுதலாக 33 பிஎச்பி உள்ளது. AMGன் டிரைவர் பேக்கேஜ் அம்சம், அதிகபட்ச வேகத்தை மணிக்கு 270 கி.மீ என நிர்ணயித்துள்ளது. இதனால் இந்தியச் சாலைகளுக்கு எல்லாவிதத்தில் இந்த கார் பொருத்தமாக இருக்கும்.


டிஜிட்டல் ஸ்பீடோமீட்டர் 270 கி.மீ வேகத்தை சுட்டிக் காட்டிய பின்னரும் இஞ்ஜினை மேலே செலுத்த வாய்ப்பும் இருந்தது. அதனால் சோதனையின் போது AMG A 45 S 279 கி.மீ வேகம் வரை செலுத்தப்பட்டது. DCT யூனிட் செயல்பாடும் மிகச் சிறப்பாக உள்ளது. அத்தனை வேகத்திலும் அவ்வளவு சொகுசாக உணர வைத்தது.




 
4MATIC+ உள்ள திறன் கார் டயர்களுக்கு ஸ்டெடியான க்ரிப்பைக் கொடுத்தது. மிச்செலின் டயர்கள் வெகு சிறப்பாகப் பொருந்தி செயல்பட்டன. 


AMG A 45 S ஐ,  A 35 AMG உடன் ஒப்பிட்டுப் பார்த்தால் இதன் விலை கையடக்கமாக இருக்கும். இந்தியாவில் கையடக்க விலையில் ஒரு A-Class கார் எனலாம். AMG A 45 S ஒரு பக்கா ஸ்போர்ட்ஸ் கார் என்றால் அது மிகையாகாது. அதை நீங்கள் நம்ப மறுத்தால் அதில் பயணம் செய்யும்போது ஏற்படும் அனுபவம் உங்களுக்கு அதை உணர்த்தும்.


AMG A 45 S ன் வடிவமைப்பு வசீகரமாக உள்ளது. முன்னால் இருந்து பார்த்தால் ஏதோ சிறிய ரக கார் என நினைக்கலாம். ஆனால், அதன் பானட்டும், வலுவான வடிவமைப்பும் 45 ரகத்துடன் ஒப்பிடச் செய்யும். 19-அங்குல அலாய் வீல் இன்னொரு சிறப்பம்சம். முன்பக்கம் எல்இடி விளகுகள் உள்ளன.  A 45 S ரக கார் நிச்சயமாக அதிகாரத்தின் சாட்சி என்பது போன்ற பொலிவைக் கொண்டிருக்கும். நப்பா லெதரால் சீட்கள் உருவாக்கப்பட்டுள்ளன. ஸ்டீரிங் வீலிலும் லெதர் இருக்கும்.


உள்கட்டமைப்பு:


உள்கட்டமைப்பும் படு ஜோராக இருக்கும். முன்பக்க சீட்கள் ஸ்போர்ட்டி எஃபெக்ட் தரும். அதிலிருக்கும் மஞ்சல் நிறம் தான் ஹைலைட். MBUX இன்டர்ஃபேஸ் உள்ளது. தனித்துவம் வாய்ந்த தீம், லைட்டிங் ஆகியன சொர்க்கம் போன்றதொரு உணர்வைத் தரும்.
 
AMG A 45 S ரக காரில் ரேஸ் மோட் காரும் கிடைக்கிறது. அது வேண்டாம் என்பவர்கள் ட்ரிஃப்ட் மோடை தேர்வு செய்து கொள்ளலாம். பின்னால் உள்ள இருக்கைகள் இரண்டு பெரியவர்களுக்குப் போதுமானது. முந்தைய ஜெனரேஷன்  A-Class ஹேட்ச்பேக்கை விட சற்றே வசதியானது. கால் நீட்டிக் கொள்ள வசதியான லெக் ரூம் ஸ்பேஸ் இருக்கிறது. சுமையைப் பொருத்தவரை 370 லிட்டர் பூட் கெபாசிட்டி கொண்டது.




அன்றாட பயன்பாட்டைப் பொருத்தவரை ஏ கிளாஸ் ஹேட்ச்பேக்கைப் போலவே, Mercedes-AMG A 45 S காரும் வசதியானதாகவே இருக்கிறது. AMG A 45 S  காரில் ஒரே இன்ஜின் ஒரே மாதிரியான இயந்திரக் கொள்கை எனபது Affalterbach மூலம் உறுதிசெய்யப்பட்டுள்ளது. இன் பில்ட் வசதியான இது இந்தியாவிற்கு சிபியு CBU தொழில்நுட்பத்தில் வருகிறது.


விலை:


இந்தியாவில் இதன் விலை ரூ.79.50 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. A 35 AMG ரூ.57.49 லட்சம் மட்டுமே. ஒப்பீட்டு அளவில் விலை அதிகமாக இருந்தாலும் கூட விலையைவிட செயல்திறன் தான் முக்கியம் என நினைப்போர் நிச்சயமாக மெர்சிடீஸ் AMG A 45 S 4MATIC+ ரக காரை தேர்வு செய்வார்கள்.


Car loan Information:

Calculate Car Loan EMI