நடிகர் ஜெய் தற்போது இயக்குநரும் நடிகருமான சுந்தர் சி தயாரிப்பில் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ள நிலையில் அடுத்த படம் ஒன்றில் நடிக்கவும் ஒப்பந்தமாகி உள்ளார் என்ற அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது. இறுதியாக நடிகர் ஜெய் எஸ்.ஏ. சந்திரசேகர் இயக்கத்தில் வெளியான கேப்மாரி என்ற படத்தில் தோன்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. 


நடிகர் ஜெய்.


நடிகர் ஜெய் பிரபல இசை குடும்பத்தில் பிறந்தவர் என்பது அனைவரும் அறிந்ததே, தேனிசை தென்றல் தேவாவின் உறவினரான ஜெய் சென்னையில் பிறந்து தனது பள்ளிப்படிப்பை வளசரவாக்கத்தில் முடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு தனது இசைப்படிப்பை லண்டனின் மேற்கொண்டார் ஜெய். அதன் பிறகு சென்னை வந்த அவருக்கு சினிமா ஆசை ஏற்படவே தேவா இசையில் தளபதி விஜய் நடிப்பில் 2002ம் ஆண்டு வெளியான பகவதி படத்தின் தளபதியின் தம்பியாக நடித்தார். அதுவே அவருடைய முதல் திரை அனுபவம். 






அதன் பிறகு ஆண்டுகள் கடந்தது, தனது இசை பயணத்தை தொடர்ந்த அவர் அவ்வப்போது தேவா மற்றும் ஸ்ரீகாந் தேவா ஆகியோரின் படங்களில் keyboard வாசித்து வந்தார். அதன் பிறகு பிரபல இயக்குநர் வெங்கட் பிரபு கொடுத்த பிரேக் தான் 2007ம் ஆண்டு ஜெய் நடிப்பில் வெளியான சென்னை 28 திரைப்படம். சென்னை 28 சூப்பர்ஹிட்டான நிலையில் ஜெய்க்கு பட வாய்ப்புகள் குவிந்தது. சென்னை 28 படத்திற்கு அடுத்தபடியாக வெளியான சுப்ரமணியபுரம் திரைப்படம் அவரது தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்த உதவியது. வாமனன், சரோஜா, கோவா போன்ற படங்கள் அவருக்கு வெற்றி படங்களாக அமைந்தது.          



  


நீங்களும் சுந்தர் பிச்சை ஆக வேண்டுமா... இந்த 5 பாடல்கள் தான் ‛வார்ம் அப்’ !


தமிழ் மொழியை தவிர மலையாள மொழியிலும் நடித்துள்ள நடிகர் ஜெய் கடந்த 2019ம் ஆண்டு எல். சுரேஷ் இயக்கத்தில் வெளியான நீயா 2 மற்றும் எஸ்.ஏ. சந்திரசேகரின் கேப்மாரி ஆகிய படங்களில் தோன்றினார். மேலும் இந்த 2021ம் ஆண்டு சார்லி உள்ளிட்ட சில படங்களில் நடித்து வரும் ஜெய் பிரபல இயக்குநர் மற்றும் நடிகர் சுந்தர் சி-யின் தயாரிப்பில் நடிக்க உள்ளார். இந்நிலையில் பிரபல இயங்குநர் அட்லீயின் தயாரிப்பில் அவருடைய உதவி இயக்குநர் ஒருவர் இயக்கும் படத்திலும் நடிக்க தற்போது ஒப்பந்தமாகி உள்ளார் ஜெய் என்று அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.