தா.சே.ஞானவேல் இயக்கத்தில் சூர்யா தயாரித்து நடித்து முடித்துள்ள திரைப்படம் ‘ஜெய் பீம்’ . இந்த படம் சூர்யாவின் 39 வது படமாக உருவாகியுள்ளது. ஜெய் பீம் படத்தின் டைட்டில்  மற்றும் ஃபஸ்ட் லுக் போஸ்டர் வெளியான சில நிமிடங்களிலேயே வைரலாகி பெரிய அளவிலான வரவேற்பைப் பெற்றது. படத்தில் சூர்யா வழக்கறிஞராக நடிக்கிறார் என்பது போஸ்டரை பார்க்கும் பொழுதே தெரிகிறது. படம் குறித்து மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வரும் சூழலில் படம் குறித்த அப்டேட் ஒன்றை படத்தின் இசையமைப்பாளர் சீன் ரோல்டன்  ஷேர் செய்துள்ளார். பல இசைக்கலைஞர்கள் ஒன்றிணைந்து பின்னணி இசை அமைக்கும் பணியின் போது எடுத்த வீடியோ ஒன்றை அவர் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் 
  ஜெய் பீம் படத்தின் அடுத்த அப்டேட் மிக விரைவில் வெளியாகும் என்றும் அதுவரை காத்திருங்கள் நண்பர்களே என குறிப்பிட்டுள்ளார். இது தற்போது வைரலாகி வருகிறது.

Continues below advertisement


 






ஜெய் பீம் படத்தை சூர்யா மற்றும் ஜோதிகாவிற்கு சொந்தமான 2 டி எண்டர்டைன்மெண்ட் தயாரித்துள்ளது. முன்னதாக படம் அமேசான் பிரைம் ஒடிடி தளத்திற்கு விற்கப்பட்டுள்ளது. ஜெய் பீம் படம் வருகிற நவம்பர் மாதம்  2 ஆம் தேதி வெளியிடப்படும் என்ற அறிவிப்பை நடிகரும் தயாரிப்பாளருமான சூர்யா தனது சமூக வலைத்தள பக்கத்தில் தெரிவித்திருந்தார்.  விரைவில் படத்தின் டிரைலர் அல்லது பாடல் வெளியாகும் எனவும் அது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை சூர்யா வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.







ஜெய் பீம் படத்திற்கு தணிக்கைக் குழு  ’ஏ’ சான்றிதழ் வழங்கியுள்ளது. நடிகர் சூர்யா நடிப்பில் வெளியாகும் திரைப்படம் ஒன்றுக்கு ஏ சான்றிதழ் கொடுக்கப்படுவது இது இரண்டாம் முறை கடைசியாக 2010ல் வெளியான ரத்த சரித்திரம் படத்துக்கு ஏ சான்றிதழ் கொடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 1993ல் ஓய்வுபெற்ற நீதிபதி சந்துருவின் வாழ்வில் நடந்த ஒரு உண்மைச் சம்பவத்தை மையமாக வைத்து இந்தத் திரைப்படம் உருவாகியுள்ளது.


இந்தப் படம் குறித்த சில தகவல்களைப் படத்தின் இயக்குநர் ஞானவேல் பகிர்ந்திருந்தார். ஜெய்பீம் திரைப்படம் மிகவும் விறுவிறுப்பான படமாக இருக்கும் .மேலும், ‘சென்னை உயர்நீதிமன்றத்தின் நடவடிக்கைகளை இதுவரையில் இந்த படமும் ஆழமாக பேசியதில்லை ஆனால் முதன்முதலாக ஜெய்பீம் படத்தில் நாங்கள் அந்தப் பணியைச் செய்திருக்கிறோம்’ என அவர் தெரிவித்திருந்தார். சட்ட மேதை அம்பேத்காரை குறிக்கும் சொல்லான ‘ஜெய் பீம்’ என்பதை படத்தின் தலைப்பாக வைத்திருப்பதாலும் , படத்தில் சூர்யா வழக்கறிஞராக நடிப்பதாலுமே படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்தப் படத்தில் சூர்யாவுடன் பிரகாஷ்ராஜ், ரஜீஷா விஜயன், லிஜோ மோல் ஆகியோர் நடித்துள்ளனர்.