Dosa King: பாலிவுட்டில் அறிமுகமாகும் 'ஜெய்பீம்' இயக்குநர்.. முழு விபரம் உள்ளே..!

ஜெய்பீம் படத்தை இயக்கியதன் மூலம் பிரபலமான இயக்குநர் ஞானவேல் ராஜா தற்போது பாலிவுட்டில் அறிமுகமாக இருக்கிறார்

Continues below advertisement

ஜெய்பீம் படத்தை இயக்கியதன் மூலம் பிரபலமான இயக்குநர் ஞானவேல் ராஜா தற்போது பாலிவுட்டில் அறிமுகமாக இருக்கிறார்.

Continues below advertisement

தனது கணவர் பிரின்ஸ் சாந்தகுமார் படுகொலை வழக்கில், சரவண பவன் உரிமையாளர் ராஜகோபாலுக்கு எதிராக 18 ஆண்டுகள் சட்டப்போராட்டம் நடத்திய ஜீவஜோதியின் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்பட இருக்கிறது. இந்தப்படத்தை  பிரபல பாலிவுட் தயாரிப்பு நிறுவனமான ஜங்கிள் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப்படத்தை கூட்டத்தில் ஒருத்தன், ஜெய்பீம் உள்ளிட்ட படங்களை இயக்கி பிரபலமான ஞானவேல் இந்தப்படத்தை இயக்க உள்ளார். இந்தப்படத்திற்கு ‘தோசா கிங்’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது. 

 

இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான திரைப்படம் ஜெய்பீம். உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட இந்தப்படம் மக்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பை பெற்றது. பல சர்வதேச விழாக்களில் விருதுகளையும் வென்றது. அத்துடன் பல்வேறு சர்ச்சைகளையும் சந்தித்தது. 

குறிப்பாக படத்தில் குறிப்பிட்ட சமுதாயத்தை குறிக்கும் குறியீடு காலண்டரில் இடம் பெற்றிருந்ததாகவும், அந்த சமுதாயத்தின் தலைவர்களில் ஒருவர் இழிவுபடுத்தப்பட்டிருப்பதாகவும் கூறியதோடு, படத்தின் தயாரிப்பாளர்கள் சூர்யா, ஜோதிகா, மற்றும் படத்தின் இயக்குநர் ஞானவேல் ராஜா ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று வன்னியர் சேனா அமைப்பு சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் சூர்யா  சூர்யா உள்ளிடோர் மீது வழக்குப்பதிவு செய்ய வேளச்சேரி போலீசாருக்கு உத்தரவிட்டது. இது தொடர்பான விசாரணை நடைபெற்று கொண்டிருக்கிறது. 

 

 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

 

 

Continues below advertisement
Sponsored Links by Taboola