Jai Bhim 2 : “கண்டிப்பாக ஜெய்பீம் 2; கதைக்களம் இப்படித்தான் இருக்கும்” - இணைத் தயாரிப்பாளர் வெளியிட்ட சூப்பர் அப்டேட்!

Jai Bhim 2 : சிங்கம் 2 சிங்கம் 3 போல இல்லாமல் ஜெய்பீம் படத்தின் 2 ஆம் பாகம் சிறப்பாக அமையும் என சூர்யா ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

Continues below advertisement

கடந்தாண்டு வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்ப்பினை பெற்ற ஜெய் பீம் திரைப்படத்தின் நடிகர் நடிகைகள், கோவா திரைப்படத் திருவிழாவில் கலந்து கொண்டனர். அந்நிகழ்ச்சியில் பங்குபெற்ற அப்படத்தின் இணை தயாரிப்பாளர் ராஜசேகர் ஜெய் பீம் படத்தின் 2 ஆம் பாகத்திற்கான திட்டங்கள் உள்ளது என்று அப்படத்தின்  தெரிவித்துள்ளார். 

Continues below advertisement

 உண்மை சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்டிருந்த இப்படத்தை ஞானவேல் இயக்கியிருந்தார். இதில், நடிகர் மணிகண்டன் ராஜா கண்ணு என்ற முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக, லிஜோமோல் ஜோஸ் அக்கதாபாத்திரத்தை உள்வாங்கி நடித்திருப்பார். சூர்யாவும், முன்னாள் நீதிபதி சந்துரு போல நடித்து அசத்தியிருப்பார். இப்படம், திரையுலகினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதோடு, சமூகத்தில் பெறும் தாக்கத்தினை ஏற்ப்படுத்தியது. அதனால் அரசியல் ரீதியாக பல இன்னல்களை, இப்படத்தின் குழுவினர்கள் சந்தித்தனர். 

இப்படியாக பல நெருக்கடிகளை சந்தித்த ஜெய்பீம், விருதுகளையும் குவித்து தள்ளியது. அதுபோக, உலகில் உள்ள மற்ற நாட்டவரின் உணர்ச்சியை கிளரியது. ஜப்பான் நாட்டின் திரைப்பட திருவிழாவில் திரையிடப்பட்ட ஜெய்பீமை பார்த்து அந்த மக்கள் அழுது அவர்களின் உணர்ச்சியை வெளிப்படுத்தினர். இது தொடர்பான அந்த வீடியோவும் செம வைரலானது.

சமீபத்தில் நடந்த IFFI விழாவில் ஜெய் பீம் குழு பங்கேற்றுள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அப்படியாக, படத்தின் குழுவினர்கள் அனைவரும் பேட்டி கொடுத்து வந்தனர். அந்தவகையில், இதில் பங்குபெற்ற இணை தயாரிப்பாளர் ராஜசேகர் முக்கியமான ஒரு செய்தியை வெளியிட்டார். “ ஜெய் பீம் படத்தின் 2 ஆம் பாகத்திற்கான திட்டங்கள் உள்ளன. முன்னாள் நீதிபதி சந்துரு இது போன்ற பல முக்கியமான வழக்குகளை கையாண்டிருக்கிறார். எனவே கட்டாயமாக இரண்டாம் பாகம் தயாராகும்” என அவர் விளக்கம் கொடுத்துள்ளார். 

சூர்யா நடித்த சிங்கம் படம் ஹிட் ஆனதால், அதைதொடர்ந்து இயக்குநர் ஹரி, சிங்கம் 2, சிங்கம் 3 என வரிசையாக அடிக்கிக்கொண்டு போனார். இப்போது சிங்கம் 4 பற்றிய பேச்சுவார்த்தையும் அடிப்பட்டு வருகிறது. முதல் சிங்கம் படம் ஹிட்டானது போல், மற்ற படங்கள் ஹிட்டாகவில்லை. அதுபோல், ஜெய்பீம் 2 படமும் நன்றாக இருக்காது என சிலர் கூறிவருகின்றனர். அதற்கு பதிலளித்த சூர்யா ரசிகர்கள், “ சிங்கம் 2 சிங்கம் 3 போல இல்லாமல் ஜெய்பீம் படத்தின் 2 ஆம் பாகம் சிறப்பாக அமையும்” தெரிவித்து வருகின்றனர்.

Continues below advertisement
Sponsored Links by Taboola