தென்னிந்திய சினிமாவின் முன்னணி ஹீரோக்களில் மிக முக்கியமான  நடிகர் சூர்யா. சமீபகாலமாக அவர் நடிக்கும் அனைத்து படங்களில சமூகம் சார்ந்த படங்களாக இருந்து வருகிறது. தான் நடிக்கும் ஒவ்வொரு படத்தையும் மிகவும் நேர்த்தியாக தேர்ந்து எடுப்பது தான் அவரின் வெற்றிக்கு முக்கியமான காரணமாக பார்க்கப்படுகிறது. 


 



 


IMDbல் டாப் 20 வரிசையில் சூர்யா படங்கள் :


அந்த வகையில் நடிகர் சூர்யா நடிப்பில் 2021ம் ஆண்டு த.செ. ஞானவேல் இயக்கத்தில் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் வெளியான திரைப்படம் "ஜெய் பீம்". இது மலை கிராமங்களை வாழ்வாதாரமாக கொண்ட பழங்குடியினரின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படமாக வந்திருந்தது. அவர்களுக்கு எதிராக நடந்த அநீதிகளையும் கொடுமைகளையும் உண்மை சம்பவத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இக்கதை ஒட்டுமொத்த திரை ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்தது. இப்படம் நேரடியாக அமேசான் பிரைம் ஓடிடி  தளத்தில் வெளியாகி ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. இந்த திரைப்படம் IMDbல் 10க்கு 8.9 புள்ளிகள் பெற்று 7வது இடத்தில் உள்ளது. 


 






 


மேலும் நடிகர் சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் வெளியான "சூரரைப் போற்று" திரைப்படமும் அமோகமான வரவேற்பை பெற்றது. இப்படத்திற்கு சமீபத்தில் தான் சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த பின்னணி இசை, சிறந்த இயக்குனர் என ஐந்து பிரிவுகளின் கீழ் ஐந்து தேசிய விருதுகள் வழங்கப்பட்டது. சூரரை போற்று திரைப்படம்  IMDbல் 10க்கு 8.7 புள்ளிகள் பெற்று 16வது இடத்தில் உள்ளது.


 






 


IMDbன் ரேட்டிங்கின் படி முன்னிலை வகிக்கும் 250 இந்திய திரைப்படங்களில் டாப் 20 லிஸ்டில் இடம் பெற்றுள்ளது நடிகர் சூர்யா நடித்த "ஜெய் பீம்" மற்றும் "சூரரைப் போற்று" திரைப்படம். இந்த அறிவிப்பை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம். இதற்கு லைக்ஸ்களும் கமெண்ட்களும் குவிந்து வருகின்றன. இந்த  இரண்டு திரை படங்களையும் அமேசான் பிரைம் வீடியோவில் கண்டு ரசிக்கலாம்.