தென்னிந்திய சினிமாவில் மிகவும் பிரபலமான ஒரு நடிகையான ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் தனது அம்மாவின் இழப்பை எப்படி கடந்து வந்தார் என்பதை சமீபத்தில் அவர் கலந்து கொண்ட நேர்காணல் ஒன்றில் கூறியிருந்தார். தற்போது ஜான்வி கபூர், வருண் தவானுக்கு ஜோடியாக 'பவால்' படத்தில் நடித்து வருகிறார்.
ஜான்வியை நடிகை ஸ்ரீதேவி லட்டு என்று தான் அழைப்பாராம். அம்மாவின் நினைவுகளில் இருந்து வெளிவர வேண்டும் என்பதற்காக அதிகமான நேரத்தை வேலை செய்வதில் கவனம் செலுத்தியுள்ளார். அந்த சமயத்தில் என் வாழ்க்கையில் என்ன நடந்தது என்பது எனக்கு மங்கலாகவே இருக்கிறது. நீண்ட நாட்களுக்கு பிறகு அது மங்கலாக தோன்றியது என அம்மாவின் இழப்பு குறித்து மனம் திறந்து பேசியிருந்தார் ஜான்வி கபூர். 2018ம் ஆண்டு பிப்ரவரி மாதம் துபாயில் உயிரிழந்தார் நடிகை ஸ்ரீதேவி என்பது குறிப்பிடத்தக்கது.
வருண் தவான் - ஜான்வி கபூர் நடிக்கும் நிதேஷ் திவாரியின் 'பவால்' திரைப்படம் அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாக உள்ளது. அதை தொடர்ந்து ராஜ்குமார் ராவுடன் 'மிஸ்டர் அண்ட் மிஸஸ் மஹி' என்ற ஸ்போர்ட்ஸ் சார்ந்த படத்திலும் திரைப்பட தயாரிப்பாளர் கொரடலா சிவாவின் 'தேவரா' என்ற தெலுங்கு படத்தில் ஜூனியர் என்.டி.ஆர் உடனும் நடிக்கவுள்ளார்.