சமீபத்தில் அஜித் தனது சுயலாபத்திற்காக தனது ரசிகர்களை பயன்படுத்த மாட்டேன் என சமீபத்தில் தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார். இதனால் விஜயைத் தொடர்ந்து நடிகர் அஜித் குமாரும் அரசியலுக்கு வருவாரா என்கிற கேள்வி இருந்து வருகிறது. பல வருடங்களுக்குப் பின் அஜித் கார் ரேஸிங்கில் மற்படுயும் போட்டியிட்டி வருகிறார்கள். அவர் அரசியலுக்கு வருவதற்கான காரணங்கள் குறைவு என்றாலும் அஜித்திற்கு அரசியல் கதவுகள் எப்போதும் திறந்தே இருக்கின்றன. மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அதிமுகவில் இணைய அஜித்திற்கு அழைப்பு விடுத்ததாகவும் ஆனால் அஜித் அரசியலில் விருப்பம் காட்டவில்லை என்று ஜெயலலிதாவின் அரசியல் ஆலோசகர் காலச்சக்கரம் நரசிம்மன் தெரிவித்துள்ளார்
அஜித்தை அரசியல் வாரிசாக்க நினைத்த ஜெயலலிதா
அரசியல் வாரிசைப் பொறுத்துவரை ஜெயலலிதா ஒரு நடிகரை மனதில் வைத்திருந்தார். அவர் மக்களிடம் அவர் நடந்துகொள்ளும் விதம் , பந்தா இல்லாமல் இருப்பதை எல்லாம் பார்த்து அவர் கட்சியில் வருவதற்கு ஏற்ற நபராக இருப்பார் என்று என்னிடம் சொல்லியிருக்கிறார். அவரைப் பற்றி நாங்கள் நிறைய பேசியிருக்கிறோம். அம்மா பச்சை கொடி காட்டிட்டாங்க..ஆனா அவர் வரலனு சொல்லிட்டார் . அப்படி அவர் கட்சிக்கும் வந்திருந்தால் நிச்சயம் ஜெயலலிதாவின் அரசியல் வாரிசாக இருந்திருப்பார்" என அவர் தெரிவித்துள்ளார்
ரேஸிங்கை தேர்ந்தெடுத்த அஜித்
ஆனால் அரசியல் தொடர்பான நிகழ்வுகளில் இருந்து தன்னை எப்போதும் அஜித் விலக்கியே வைத்துள்ளார். அரசியல் அழுத்தங்கள் காரணமாக சினிமா நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதையே அஜித் தவிர்த்தார். அதிமுக கட்சியில் இணைவதை விட அஜித் தனது ரேஸிங் லட்சியத்தை தொடர்வதையே தேர்ந்தெடுத்த அஜித்தின் முடிவை ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள்.