இன்றைய தலைமுறை நடிகைகள் அனைவரும் வலைத்தளங்களில் செம ஆக்டிவாக இருக்கின்றனர். அப்படி சமூக வலைத்தளங்களில் அதிக ஃபாலோவர்ஸை கொண்ட சீரியல் நடிகைகளுள் ஒருவர்தான் விஜய் டிவி அர்ச்சனா குமார் . சுருட்டை முடி, கன்னக்குழி என ஆரவாரமற்ற கிளாசிக் லுக்குடன் தோற்றமளிக்கும் அர்ச்சனா முதன் முதலாக ஜீ தமிழில் ஒளிபரப்பான நடன நிகழ்ச்சி மூலமாகத்தான் மீடியாவிற்குள் அறிமுகமாகிறார்.


சென்னையில் பிறந்து வளர்ந்து அர்ச்சனா குமார், சென்னை பெண்கள் கிறிஸ்துவ கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்தார். கல்லூரியில் படிக்கும்போது அர்ச்சனா, மீடியா மற்றும் நடனம் மீது அதிக ஆர்வம் கொண்டிருந்தார். அதன்மூலமாகவே டான்ஸ் ஜோடி டான்ஸ் ரியாலிட்டி ஷோவில் பங்கேற்கும் வாய்ப்பைப் பெற்றார். அதில் நடிகர் சித்தார்த் குமாருடன் ஜோடி சேர்ந்து ஆடினார். இந்த நிகழ்ச்சி மூலம் அர்ச்சனா மீடியா உலகில் தனது முதல் அடியை எடுத்து வைத்தார்.






டான்ஸ் ஜோடி டான்ஸ் அர்ச்சனாவுக்கு நல்ல பெயரை தேடித்தந்தது. டான்ஸ் ஷோவில் பாப்புலரான பிறகு விஜய் டிவியின் பொன்மகள் வந்தாள் சீரியலில் நடிக்க தொடங்கினார். இதை தொடர்ந்து தற்போது ஈரமான ரோஜாவே தொடரில் தேன்மொழி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த கதாபாத்திரமும் அவருக்கு நல்ல பெயரை பெற்றுத்தந்துள்ளது. சமீபத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பான காமெடி ராஜா, கலக்கல் ராணி ரியாலிட்டி ஷோவிலும் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டார். அதில் ஜெயச்சந்திரனுடன் ஜோடி சேர்ந்து, எனக்கு காமெடியும் வரும் என்று தடம் பதித்தார். 






இந்நிலையில் அர்ச்சனா தனது கையில் புதிய டாட்டூ ஒன்றை குத்தியுள்ளார். அதை வீடியோவாக எடுத்து தனது இன்ஸ்டாவிலும் பகிர்ந்துள்ளார். அதில் "நான் நீண்ட நாட்களாக என் கைகளில் பச்சை குத்திக்கொள்ள  ஆசைப்பட்டேன். டாட்டூ குத்தும் போது வலிக்கும்-னு சொல்லி அனுப்புனாங்க..ஆனா எனக்கு வலிக்கவே இல்லை.  ஏன்னா நாங்க பண்ண அலப்பறை அப்படி!" என்று அவர் பதிவிட்டுள்ளார். அவர் தனது இரண்டு கைகளிலும் டாட்டூ குத்தியுள்ளார். ஒரு கையில் 'மாம்' என்று ஆங்கிலத்தில் எழுதப்பட்டு அதனுடன் டிசைனாக ஒரு பெரிய இறகு வரைந்துள்ளார். அதன் மீது சில குட்டி பறவைகள் பறப்பது போல காட்சியளிக்கிறது. இன்னொரு கையில் விலங்கின் இரு கால் தடங்களை குத்தியிருக்கிறார். இந்த இரு டாட்டூக்களும் ஹெச்2ஒ என்னும் டாட்டூ ஸ்டுடியோவில் குத்தியுள்ளார். இதற்காக அவர் வெளியிட்ட வீடியோவில் பேச்சிலர் திரைப்படத்தில் இடம்பெற்ற 'அடியே' பாடலை பின்னணி பாடலாக பயன்படுத்தியுள்ளார். 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்த பதிவை லைக் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.