ஜோதிடத்தில் முக்கிய பங்கு கற்களுக்கு உண்டு. ஒவ்வொரு ரத்தினக்கல்லும் ஒவ்வொரு குணநலன்களை கொண்டுள்ளன. அவற்றை அனுபவர்கள் அவரவர் ராசி பலன்களுக்கு ஏற்றவாறு தேர்ந்த ஜோதிடரை அணுகி ஆலோசனை பெற்று அணியலாம். ஆனால் இந்த கற்களிலே மிகவும் உயர்ந்த ஒன்று என்றால் அது வைரம் தான். அது தரும் பலன் போல வேறு எந்த ரத்தினக்கல்லும் தருவதில்லை. ரத்தினவியல் எனப்படும் ஜெம்மாலஜி கூற்றுபடி, வைரம் ரத்தினங்களின் ராஜா என்று அழைக்கப்படுகிறது. அதனை அணிபவர்களுக்கு நல்ல பலனை தரவல்லது என்று போற்றப்படுகிறது. ஆனால் எல்லோராலும் வைரம் வாங்க இயலாது. ஏனெனில் வைரம் இருப்பதிலேயே விலை உயர்வான ரத்தினமாகவும் உள்ளது.


அப்படி வாங்க முடியாதவர்கள் அதற்கு மாற்றாக, சிர்கான் கல் வாங்கி அணியலாம். வைரத்தின் அதே பலன் அப்படியே இது கொண்டுள்ளது என்று கூறுகிறார்கள். இதன் எண்ணிலடங்காத ஆப்ஷன்ஸ் இதனை மேலும் பிரபலமாக்கி உள்ளது.



இந்த சிர்கான் கல் வைரத்தின் உப ரத்தினம் என்கிறார்கள். இது பளபளப்பில் வைரத்தை போன்றே பிரகாசிக்கும். மற்ற கற்களை விட இதன் அடர்த்தி அதிகம். வைரத்தின் அடர்த்தி 3.62 என்றால் சிர்கானின் அடர்த்தி 4.7 ஆகும். எனவே இது எளிதில் உடையது. இந்தவகை கற்கள் தாய்லாந்து, இலங்கை, வியட்நாம் ஆகிய பகுதிகளில் அதிகம் கிடைக்கின்றன. அதிகம் போலி கற்கள் புழங்கும் கற்களில் ஜிர்கானும் ஒன்று. அமெரிக்கன் டைமண்ட் எனப்படும் செயற்கை கற்களை ஜிர்கான் என கூறி விற்று விடுகிறார்கள். எனவே ஜிர்கான் வாங்குபவர்கள் நன்கு விசாரித்து வாங்கவும். ஜிர்கான், வாங்க முடியாத பட்சத்தில் வெள்ளை புஷ்பராகம், அல்லது வெள்ளை குவார்ட்ஸ் கற்களை அணிந்து பயன் அடையலாம் என நம்பப்படுகிறது


ஜோதிடர்களின் கூற்று படி, ஜிர்கானின் ஒவ்வொரு வண்ணமும் ஒவ்வெரு ராசிகளுக்கு பலன் அளிக்கக்கூடியதாகும். வைரம் வேண்டுமென்றால், வெள்ளை நிற ஜிர்கான் அணியலாம். இதனை யார் அணியலாம், யார் அணியக்கூடாது என்பதை காணலாம். 



வெள்ளை ஜிர்கான் சுக்கிரனுடன் தொடர்புடையது. அப்படிப்பட்ட சூழ்நிலையில் உங்கள் ஜாதகத்தில் சுக்கிரனின் சுப பலன் வேண்டுமானால் வெள்ளை நிற ஜிர்கான் அணியலாம். ரிஷபம் தவிர, கடகம் மற்றும் துலாம் ராசிக்கு ஜிர்கான் மங்களகரமானதாக கருதப்படுகிறது. ஜாதகத்தில் சுக்கிரன் நல்ல நிலையில் இருக்கும் ராசிக்காரர்களும் இந்த ரத்தினத்தை அணியலாம். திருமண சம்பந்தமான பிரச்சனைகளை சந்திக்கும் ஆண்களும், திருமணம் தாமதிக்கும் ஆண்களும் இந்த ரத்தினத்தை அணிவதன் மூலம், இதன் பலனை விரைவில் பெற முடியும். அதிகம் செலவு செய்பவர்கள் அல்லது பணத்தை சேமிக்க முடியாதவர்கள் ஜோதிடரின் ஆலோசனையின் பேரில் ஜிர்கான் கற்களை அணியலாம். இது செல்வ மிகுதியையும், வாழ்வில் செழிப்பையும் தருகிறது, எனவே உங்கள் ஜாதகத்தில் சுக்கிரன் பலவீனமாக இருந்தால், நிதி சிக்கல்களை எதிர்கொண்டால், நீங்கள் தாராளமாக ஜிர்கான் கல்லை அணியலாம் என நம்பப்படுகிறது


இதனை அணிபவர்களுக்கு உடல்ரீதியான பலனும் கிடைக்கிறது. வாதம், பித்தம், கபத்தினை சமன் செய்து ஆரோக்கியத்தினை உறுதியாக்கும். மனதுக்கு உற்சாகம் தரும். உடல் அழகினை அதிகரிக்கும். வைரத்திற்கான அனைத்து பலன்களையும் அடையலாம் என நம்பப்படுகிறது