தமிழில் ‘காதலில் சொதப்புவது எப்படி’ படம் மூலம் அறிமுகமானவர் நடிகை ஐஸ்வர்யா மேனன். தொடர்ந்து ‘தீயா வேலை செய்யணும் குமாரு’, ‘வீரா’ உள்ளிட்ட படங்களில் நடித்த இவர் 'தமிழ்ப்படம்-2' படத்தில் நடித்ததன் மூலம் கவனம் பெற்றார்.
இறுதியாக ஹிப்ஹாப் ஆதி நடிப்பில் வெளியான 'நான் சிரித்தால்' படத்தில் நடித்த இவர் கன்னட மற்றும் மலையாள மொழிகளிலும் நடித்திருக்கிறார். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிக ஆக்டிவாக இருக்கும் ஐஸ்வர்யா மேனன் தொடர்ந்து தான் போட்டோஷூட் செய்த புகைப்படங்களையும், ரீல்களையும் வெளியிட்டு வருகிறார்.
இந்த நிலையில் அவர் தற்போது தான் வொர்க் அவுட் செய்யும் வீடியோவை வெளியிட்டு இருக்கிறார். இந்த வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.