விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பீஸ்ட் படத்தில் இருந்து ஜாலி ஓ  ஜிம்கானா பாடல் வெளியிடப்பட்டிருக்கிறது.


                                                                 


 


நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பீஸ்ட் திரைப்படம். இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தின் அனைத்து பணிகளும் நிறைவு பெற்று, தற்போது வெளியீட்டு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக படத்தின் போஸ்டர், புகைப்படங்கள் வெளியாகி வைரலான நிலையில், படம் அடுத்த மாதம் வெளியாகும் என்ற அறிவிப்பும் வெளியானது. இந்த நிலையில், படத்தின் முதல் பாடல் வெளியீடாக காதலர் தினத்தன்று அரபிக்குத்து பாடல் வெளியாகியிருந்தது.


 


 


                                                               


பேன் இந்தியா ஹிட்டாக மாறிய இந்தப் பாடலை தொடர்ந்து, அதே பாணியிலான ப்ரோமோஷனில் ஜிம்கானா பாடல் சிங்கிள் ப்ரோமோ சில நாட்களுக்கு முன் வெளியானதோடு அந்த பாடல் இன்று வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.


 


                                                       


விஜய் குரலில் வெளியாக இருக்கும் இந்த பாடல் வெளியீட்டை முன்னிட்டு படத்தில் நடித்த நடிகர்களுடன் ஷூட்டிங் ஸ்பாட்டில் நெல்சன் அடுத்த லூட்டி தொடர்பான வீடியோவும் வெளியிடப்பட்டது. இது சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், அதனைத்தொடர்ந்து ஜாலி ஓ ஜிம்கானா பாடல்  வெளியிடப்பட்டிருக்கிறது. இந்தப் படத்தில் விஜய்க்கு கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடித்திருக்கிறார். விண்ணைதாண்டி வருவாயா, என்னை நோக்கி பாயும் தோட்டா உள்ளிட்ட படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த ஒளிப்பதிவாளர் மனோஜ் பரம்ஹம்சா ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இசையமைப்பாளர் அனிருத் படத்திற்கு இசையமைத்திருக்கிறார்.