கோவாவில் நடைபெற்ற இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் (IFFI) 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' படத்தை "பிரச்சாரம்" மற்றும் "கொச்சையான படம்" என்று கூறிய தனது நாட்டைச் சேர்ந்த ஒரு திரைப்படத் தயாரிப்பாளரை இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர் நூர் கிலோன் இன்று பகிரங்கமாகக் கண்டித்தார்.


விழா நடுவர் குழுவின் தலைவராக உள்ள திரைப்பட தயாரிப்பாளர் நடவ் லாபிட், நேற்று நிறைவு விழாவில் திரைப்படத்தை அவதூறாக பேசியதை அடுத்து, தூதுவர் நூர் கிலோனும் ட்விட்டரில் இந்தியாவிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். மேலும் இதற்காக நடவ் லாபிட் இடம் ''நீங்கள் வெட்கப்பட வேண்டும்'' எனக் கூறியுள்ளார்.






இந்த ஆண்டு தொடக்கத்தில் வெளியாகி பெரும் சர்ச்சைகளைக் கிளப்பிய படம் ’தி காஷ்மீர் ஃபைல்ஸ்’. பாலிவுட் இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி இயக்கிய இப்படம், காஷ்மீரில் இருந்து 1990ஆம் ஆண்டு பண்டிதர்கள் வெளியேற்றப்பட்ட சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட நிலையில், சமூக வலைதளங்களில் இன்றளவும் கடும் விமர்சனங்களைப் பெற்றது.




கோவா திரைப்பட விழாவில் ‘காஷ்மீர் பைல்ஸ் திரைப்படம் திரையிடப்பட்ட நிலையில், இந்த திரைப்பட விழாவின் தேர்வுக்குழு தலைவர் இது வெறுப்புணர்வை தூண்டும் திரைப்படம் என தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். 


சுமார் 9 நாட்கள் நடைபெற்ற கோவா திரைப்பட விழாவில் 79 நாடுகளை சேர்ந்த 280 படங்கள் திரையிடப்பட்டது. இந்த விழாவில் தி காஷ்மீர் பைல்ஸ் திரைப்படமும் திரையிடப்பட்டு, விருதுகள் எதுவும் அறிவிக்கப்படவில்லை. 






இந்த சூழலில், திரைப்பட விழாவின் நேற்று கடைசி நாளான்று இந்த திரைப்பட விழாவின் தேர்வுக்குழு தலைவர் நாடவ் லேபிட் பேசினார். அப்போது பேசிய அவர், ”தி காஷ்மீர் பைல்ஸ் திரைப்படம் வெறுப்புணர்வை தூண்டும் திரைப்படம். இது திரைப்பட விழாவுக்கு ஏற்ற திரைப்படம் இல்லை. இந்த படத்தை பார்த்த நாங்கள் அனைவரும் கலக்கமடைந்தோம், அதிர்ச்சியடைந்தோம். இந்த விழாவில் நாங்கள் உணர்ந்த உணர்வு கலைக்கும், வாழ்க்கைக்கும் இன்றியமையாத ஒரு விமர்சன விவாதத்தையும் உண்மையாக ஏற்றுக்கொள்ளும் என்பதால், இந்த திரைப்படம் திரையிடப்பட்டதற்கு நாங்கள் வெளிப்படையாகவே அதிருப்தியை தெரிவித்து கொள்கிறோம்.” என்றார்.


காஷ்மீர் ஃபைல்ஸ்' இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரியின் தனது அடுத்த படத்திற்கு ‘தி வேக்சின் வார்’ எனப் பெயர் வைத்துள்ளார்.