திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே ஆக்கூர் கூட்டு ரோடு பகுதியில் சிமென்ட் ஜாலி ஒர்க்ஸ் கடையில் ஆசிட் கேனை அறுத்தபோது கேன் வெடித்து தொழிலாளி உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தூசி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். செய்யாறு அடுத்த வெம்பாக்கம் தாலுக்கா உக்கம் பெரும்பாக்கம் காலனி பகுதியை சேர்ந்தவர் ஆசைத்தம்பி (29), இவர் காஞ்சிபுரம் - வந்தவாசி சாலையில் ஆக்கூர் கூட்டு ரோடு சந்திப்பு பகுதியில் ஜாலி சிமெண்ட் வொர்க்ஸ் தொழில் செய்து வருகிறார். இவரிடம் மகாஜனம்பாக்கம் கிராம காலனியைச் சேர்ந்த சுகுமார் (28) என்பவர் அந்த கடையில் பெயின்டராக வேலை பார்த்து வந்துள்ளார்.
இவர் நேற்று காலை வழக்கம்போல் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது மாலை நேரத்தில் கடையில் ஓரமாக பல மாதங்களாக பயனற்று கிடந்த 35 லிட்டர் கொள்ளளவு கொண்ட காலாவதியான ஆசிட் கேனை எடுத்து பார்த்துள்ளார். அப்போது அந்த கேனை அப்படியே எப்படி வீசுவது அந்த கேனை அறுத்து அதில் இருக்கும் ஆசிட் எடுத்து கீழே ஊற்றிவிடலாம் என்று கூறியுள்ளார். அதனை தொடர்ந்து அந்த 20 கேனை சிறிய கத்தி மூலம் அறுக்க முயன்றுள்ளார். அப்போது திடீரென ஆசிட் கேன் பலத்த சத்தத்துடன் வெடித்து சிதறியது. அப்போது வெடித்து சிதறியதில் இளம் தொழிலாளியான சுகுமார் உடல் ஆசிட் சிதறியும் அவருடைய உடலும் சிதறியது அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து போனார்.
அதன் பிறகு அங்கு இருந்தவர்கள் தூசி காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர். பின்னர் தகவல் அறிந்த தூசி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சிதைந்து கிடந்த சுகுமாரின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் செய்யாறு துணை காவல்கண்காணிப்பாளர் செந்தில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்து எப்படி நடைபெற்றது என்பது குறித்து அங்கு உள்ளவர்களிடம் விசாரணை மேற்கொண்டுள்ளார். இந்த முதற்கட்ட விசாரணையில் சுகுமார் அறுத்த பிளாஷ்டிக் கேனில் இருந்த ஆசிட் கட்டியாகி போயுள்ளதாகவும் கேனின் மூடியை திறக்க முடியாமல் போனதால் அதனை அறுத்தபோது அதில் இருந்த கேஷ் வெடித்து சிதறியதில் சுகுமாரின் உடலும் சிதறிப்போனதாக தெரிய வருகிறது என்று காவல்துறையினர் கூறியுள்ளனர். மேலும் ஆசிட் கேன் வெடித்து இளைரின் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கல்லூரி மாணவர் கொலையில் புதிய திருப்பம் : முக்கிய குற்றவாளியான 12ம் வகுப்பு மாணவி கைது!