கீர்த்தி சுரேஷ் திருமணம்:
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருந்த கீர்த்தி சுரேஷ், கடந்த டிசம்பர் 12-ஆம் தேதி காதலர் ஆண்டனி தட்டில் என்பவரை திருமணம் செய்து கொண்டார். கோவாவில் நடைபெற்ற கீர்த்தி சுரேஷ் திருமணத்திற்கு, விஜய் தனி விமானத்தில் சென்றார். அப்போது அவருடன் த்ரிஷாவும் அதே விமானத்தில் டிராவல் செய்துள்ளார். இது தொடர்பான புகைப்படம் மற்றும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், இருவருக்கும் சினிமாவையும் தாண்டி உறவு இருப்பதாக கிசுகிசுக்கப்பட்டது.
விஜய் மற்றும் த்ரிஷாவுக்கும் இடையில் தனி டிராக்:
இந்த நிலையில் தான் இது குறித்து வலைபேச்சு பிரபலமான பிஸ்மி தன்னுடைய கருத்தை பகிர்ந்துள்ளார். சினிமாவைப் பொறுத்த வரையில் கடந்த சில ஆண்டுகளாக விஜய் மற்றும் த்ரிஷாவுக்கும் இடையில் தனி டிராக் இருப்பதாக கூறப்பட்டு வருகிறது. விஜய் மற்றும் த்ரிஷா இருவரும் கீர்த்தி சுரேஷின் திருமணத்திற்கு தனி விமானத்தில் கோவாவிற்கு சென்றது தான் இப்போது ஹாட் டாபிக்காக சோஷியல் மீடியவை அதிர வைத்து வருகிறது.
இதுவே விஜய் வேறு ஒரு ஆண் நண்பரோடு சென்றிருந்தால் இந்தளவிற்கு பேசுவார்களா என்று கேள்வி எழுப்பினார். ஏற்கனவே கில்லி படம் முதலே விஜய் மற்றும் த்ரிஷா இருவரும் நல்ல நண்பர்கள். கில்லி படத்திற்கு பிறகு ஆதி, லியோ, கோட் என்று பல படங்களில் நடித்திருக்கிறார்கள். கடைசியாக விஜய்யின் கோட் படத்தில் ஒரு பாடலுக்கு விஜய்யுடன் இணைந்து டான்ஸ் கூட த்ரிஷா ஆடியிருப்பார். அப்படியிருக்கும் போது விஜய் மற்றும் த்ரிஷா பற்றி தொடர்புபடுத்தி கூறுவது தவறு. உண்மையை தெரிந்து கொண்டு பேச வேண்டும்.
கீர்த்தி சுரேஷ் - விஜய் இடையே கிசுகிசு:
இதே போன்று தான் விஜய் மற்றும் கீர்த்தி சுரேஷ் பற்றி கூட வதந்தி வந்தது. இது குறித்து கீர்த்தி சுரேஷ் கூட என்னிடம் பேசினார். நான் பள்ளி பருவத்திலிருந்து ஒருவரை காதலித்து வருகிறேன். அப்படியிருக்கும் போது இப்போது என்னைப் பற்றியும், விஜய் சாரைப் பற்றியும் வதந்திகள் வந்து கொண்டே இருக்கிறது.
உதவி கேட்ட கீர்த்தி சுரேஷ்:
இவ்வளவு ஏன், எனது லவ்வர் பிறந்தநாளுக்கு அவருக்கு விஜய் சார் வாழ்த்து தெரிவித்தார். இது யாருக்கும் தெரியாது. அப்படியிருக்கும் போது, இதைப் பற்றி நான் வெளிப்படையாக பேசவும் முடியாது. எங்களது காதலுக்கு இன்னும் வீட்டில் ஓகே கூட சொல்லவில்லை. அதற்காக நான் அவர்களிடம் பேசி வருகிறேன். நீங்கள் தான் எங்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்று கீர்த்தி சுரேஷ் கூறியதாக வலைபேச்சு பிஸ்மி பழைய கதையை கூறி பலரை ஆச்சர்ய படுத்தியுள்ளார்.