சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கி சமீபத்தில் வெளியான படம் மாநாடு(Maanaadu). சிம்பு கதாநாயகனாக நடித்த இப்படத்தில் அவருக்கு ஜோடியாக கல்யாணி ப்ரியதர்ஷன் நடித்திருந்தார். இப்படத்தில்
எஸ்.ஜே. சூர்யா, ப்ரேம் ஜி, எஸ்.ஏ. சந்திரசேகர் உள்ளிட்டோரும் நடித்திருந்தனர். படப்பிடிப்பின் போதே பல சர்ச்சைகளை சந்தித்த மாநாடு தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டு அதிலும் சொதப்பியது. பல தடைகளைத் தாண்டி கடந்த நவம்பர் 25ஆம் தேதி வெளியானது மாநாடு.
டைம் லூப் கான்செப்ட்டும், அதனை கூறிய விதமும் ரசிகர்களிடம் பலத்த வரவேற்பை பெற்றதால் மாநாடு மாஸ் ஹிட்டடித்தது. சிம்புவின் ரீ எண்ட்ரி மாஸாக இருப்பதாக அவரது ரசிகர்கள் கொண்டாடினர். வசூலிலும் மாநாடு எதிர்பாராத இலக்கை தொட்டது. இதனை சமீபத்தில் படக்குழு கொண்டாடியது. படத்தில் வெற்றி விழா கொண்டாட்டப்பட்டது. ஆனால் படத்தில் நாயகன் வெற்றி விழாவுக்கு ஆப்செண்ட் ஆனார். இது குறித்து மேடையிலேயே கண்டனத்தை பதிவு செய்த விஜயின் தந்தையும், இயக்குநருமான எஸ் ஏ சி, வெற்றி என்றதும் சிம்பு இப்படி செய்யக் கூடாது என்றார். அவர் வந்திருக்க வேண்டும் எனக் குறிப்பிட்டார்.
வெந்து தணிந்தது காடு திரைப்பட ஷூட்டிங் பரபரப்பாக சென்றுகொண்டிருப்பதால் சிம்பு வரவில்லை எனக் கூறப்பட்டது. ஆனால் காரணம் அது இல்லையாம். பட வசூல் தொடர்பாக போஸ்டர் அடிப்பதில் தான் சுரேஷ் காமாட்சிக்கும், சிம்புவுக்கும் சிக்கலானதாகவும், அதனால் சிம்பு விழாவை புறக்கணித்ததாகவும் தகவல் கசிந்துள்ளது. மாநாடு 108 கோடு ரூபாய் வசூல் செய்ததாக ஸ்பெஷல் போஸ்டர் வெளியிட சிம்பு விருப்பம் தெரிவித்ததாகவும், ஆனால் வசூல் தொடர்பாகவெல்லாம் வெளிப்படையாக பேசினால் வருமான வரித்துறை பிரச்னை வரும் என்பதால் சுரேஷ் காமாட்சி மறுத்ததாகவும் தெரிகிறது. இதனால் தான் சிம்பு விழாவை புறக்கணித்ததாகவும் தெரிகிறது. ஒன்னொரு காரணமும் கோடம்பாக்கத்தை சுற்றி வருகிறது.
படத்தின் சாட்டிலைட் உரிமை தொடர்பாக படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி மற்றும் பைனான்சியர் உத்தம் சந்த் ஆகியோர் மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் டி.ராஜேந்தர் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த சம்பவமும் சிம்புவின் ஆப்செண்டுக்கு காரணமோ எனக் கூறப்படுகிறது.
இதற்கிடையே மாநாடு படம் எந்த ஓடிடியில் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடத்தில் இருந்தது. இந்தச் சுழலில் மாநாடு சோனி லிவ் ஓடிடியில் வெளியாகும் என சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. ஆனால் ஓடிடியில் வெளியாகும் தேதி மட்டும் தெரிவிக்கப்படவில்லை. இந்நிலையில் மாநாடு திரைப்படம் டிசம்பர் 24-ஆம் தேதி சோனி லிவ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்