சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து இயக்குநர் நெல்சன் திலீப்குமார்  இயக்கும் ஜெயிலர் திரைப்படம் நடிகர் சிவகார்த்திகேயன் அவர்களின் தந்தையின் கதாபாத்திரத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்டிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


இயக்குநர் நெல்சன் திலிப்குமார் இயக்கி வரும் திரைப்படம் ஜெயிலர். சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், தமன்னா, ஜாக்கி ஷ்ராஃப், ஆகியவர்கள்  இந்தப் படத்தின் நடித்து வருகிறார்கள். ரஜினிகாந்த் இந்தப் படத்தின் சிறைச்சாலை காவலாக நடிக்கிறார். இந்தக் கதாபாத்திரம் நடிகர் சிவகார்த்திகேயனின் தந்தையை இன்ஸ்பிரேஷனாக வைத்து உருவாக்கப்பட்டிருக்கலாம் என்று பேச்சு எழுந்துள்ளது.


சிவகார்த்திகேயனின் தந்தை காவல் அதிகாரியாக இருந்த தகவல் நாம் அனைவரும் அறிந்ததே. தனது வாழ்நாள் முழுவதும்  ஒரு நேர்மையான காவல் அதிகாரியாக பணியாற்றினாராம். தனக்கென சில நடைமுறைகளை அவர் தொடர்ந்து பின்பற்றியும் வந்திருக்கிறார். தனது வீட்டில் இருந்து சாப்பாடு, தண்ணீர் எல்லாம் தனது வீட்டில் இருந்தே கொண்டு சென்றுவிடுவாராம். மேலும் சிறையில் இருக்கும் கைதிகளின் நலனைப் பற்றி அதிக கவணம் எடுத்துக்கொள்பவர் அவர். சிறையில் இருந்த பல கைதிகளை படிக்க ஊக்குவித்து அவர்கள் பட்டப்படிப்பை முடிப்பதற்கு உதவி செய்திருக்கிறார். மேலும் அவரது சொந்த முயற்சியால் சிறையில் கைதிகளுக்காக ஒரு நூலகத்தை அமைத்திருக்கிறார். ஜெயிலரில் ரஜினிகாந்தின் கதாபாத்திரம் இந்த பண்புகளை கொண்டிருந்தால் அது நிச்சயம் சிவகார்த்திகேயனின் தந்தையை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கலாம்.


நெல்சம் மற்றும் சிவகார்த்திகேயன் இருவரும் நெருங்கிய நண்பர்கள். இருவரும் சேர்ந்து விஜய் தொலைகாட்சியில் ஒரே நிகழ்ச்சியில் வேலைசெய்த காலத்தில் இருந்தே நல்ல நண்பர்களாக இருந்து வருகிறார்கள், சிம்புவை வைத்து நெல்சன் இயக்கிய வேட்டை மன்னன் திரைப்படத்தின்போது சிவகார்த்திகேயன் தனது நண்பர் ஒருவரை உதவி இயக்குநராக சேர்த்துக்கொள்ளும் படி கேட்டுக்கொண்டுள்ளார். தன்னிடம் ஏற்கனவே இருக்கும் உதவி இயக்குநர்களை வைத்து என்ன செய்யவென்று தெரியாமல் இருப்பதாகவும் மேலும் ஒருவரை சேர்த்துக்கொண்டு என்ன செய்வது என்றிருக்கிறார் நெல்சன். ஒருவழியாக அந்த நபரை உதவி இயக்குநராக வைத்துக்கொண்டார் நெல்சன். அந்த நபர் வேறு யாரும் இல்லை இயக்குநர் அருண்ராஜா காமராஜாதான்.


அருண்ராஜா காமராஜா இயக்கிய கனா திரைப்படத்தில் சிறப்புக் கதாபாத்திரத்தில் நடித்த சிவகார்த்திகேயனுக்கு நெல்சன் திலீப்குமார் என்று பெயர் வைத்திருப்பார் அருண்ராஜா காமராஜா. இந்த காரணங்களை எல்லாம் வைத்து பார்க்கும்போது ஜெயிலர் படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும்  அதிகமாகியுள்ளது.


அண்மையில் ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக படக்குழு சார்பில் அறிவிக்கப்பட்டது. விரைவில் படத்தின் ட்ரெய்லர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.