தமிழ் ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படம் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இளைய தளபதி விஜய் நடிக்கவிருக்கும் தளபதி 67. இப்படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் மாதம் முதல் தொடங்கும் என ஏற்கனவே அறிவிப்பு வெளியானது. அப்படம் குறித்த ஒரு சில தகவல்கள் பரவலாக சினிமா வட்டாரங்கள் மூலம் தெரிய வந்துள்ளது. 



 


தளபதி 67 லேட்டஸ்ட் அப்டேட் :


லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, ஃபகத் பாசில் நடிப்பில் வெளியான 'விக்ரம்' திரைப்படம் ஒரு பிளாக் பஸ்டர் திரைப்படமாக சாதனை படைத்தது. அப்படத்தின் அமோகமான வெற்றியால் தமிழ் சினிமாவின் மிக முக்கியமான இயக்குனர்களில் ஒருவராக முன்னணியில் இருக்கிறார் லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக நடிகர் விஜய்யை இயக்கவிருக்கும் திரைப்படம் தளபதி 67. இப்படம் குறித்த மற்ற தகவல்கள் இதுவரையில் வெளியாகாமல் இருந்தது. 


பெரிய திரை பட்டாளத்தோடு பேச்சுவார்த்தை :


அந்த வகையில் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் அனிருத் இசையமைக்க உள்ளார் என்றும் நிவின் பாலி, சஞ்சய் தத், விஷால், மன்சூர் அலி கான், கௌதம் வாசுதேவ் மேனன் மற்றும் பலர் வில்லன் கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளனர் என்றும் இது குறித்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் சினிமா வட்டாரங்கள் மூலம் தகவல்கள் வெளியாகியுள்ளன. 






தளபதி 67 இணையும் கமல்ஹாசன் :


மேலும் ஒரு இன்டெரெஸ்ட்டிங் தகவல் என்னவென்றால் உலகநாயகன் கமல்ஹாசனை 'தளபதி 67' படத்தில் ஒரு பவர்ஃபுல் கேரக்டரில் நடிப்பதற்காக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவரை அணுகியுள்ளார் என்பது தான். இந்த தகவல் கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவர்கள் இருவருக்கும் இருக்கும் நட்பு விக்ரம் திரைப்படம் மூலம் பலப்படுத்தப்பட்டுள்ளது. எனவே இந்த தகவல் உண்மையாகவும் இருக்க வாய்ப்புகள் உள்ளன எனவும் கூறப்படுகிறது. இது உண்மையானால் தமிழ் சினிமாவின் இரண்டு ஸ்டார் ஹீரோக்கள் முதல் முறையாக இணையும் திரைப்படம் இதுவாக இருக்கும். 






மிகவும் பிஸியான கமல்ஹாசன் :


உலகநாயகன் தற்போது ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். மேலும் ஹெச். வினோத் இயக்கத்தில் KH233 படத்தில் இணையவுள்ளார் எனும் தகவலை அடுத்து KH234 படமாக இயக்குனர் மணிரத்னத்தின் இயக்கத்தில் இணையவுள்ளார் என்றும் இப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.