49 வயதாகும் ப்ரீத்தி ஜிந்தா தனது இளமைக் கால படங்களில் நடித்தது போலவே இருப்பதாக சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.


ப்ரீத்தி ஜிந்தா


 எவர்கிரீன் என்கிற வார்த்தைக்கு அடையாளமாக சில நடிகைகளில் பெயர்களை சொல்லலாம். ஸ்ரீதேவி, தபூ,  நதியா, ஹேமா மாலினி என நடிகைகளின் பெயர்களை சொல்லிக் கொண்டே போகலாம். இந்த வரிசையில் பாலிவுட் நடிகை ப்ரீத்தி ஜிந்தாவின் பெயரை சேர்க்காமல் எப்படி... மணிரத்னம் இயக்கிய உயிரே படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடையே கவனமீர்த்தவர் நடிகை ப்ரீத்தி ஜிந்தா.






ப்ரீத்தி ஜிந்தா என்றாலே உடனே அனைவருக்கும் நினைவுக்கு வருவது சிரிக்கும்போது அவரது கன்னக்குழி தான். இன்றைய சூழலில் நடிகைகள் பிளாஸ்டிக் சர்ஜரி செய்துகொண்டு தங்களை அழகுபடுத்திக் கொண்டு தங்களது இயல்பான அழகை இழந்துவிடுவதாக ரசிகர்கள் கூறுகிறார்கள். ஆனால் மிக இயல்பாக க்யூட்டான சிரிப்பு, துள்ளலான நடிப்பு என பலவிதங்களில் ரசிகர்களை கவர்ந்த ஒருவர் நடிகை ப்ரீத்தி ஜிந்தா. 


கோய் மில் கயா, தில் சாஹ்தா ஹே, கல் ஹோ நா ஹோ என அவர் நடித்த பல படங்களில் ரசிகர்களால் இன்று வரை ரசித்து பார்க்கக் கூடியவையாக இருக்கின்றன. கடந்த 2016ஆம் ஆண்டு தனது நீண்ட கால காதலராக ஜீன் குட்னஃப் என்பவரை திருமணம் செய்துகொண்டார் ப்ரீத்தி ஜிந்தா. சமீபத்தில் தனது 8ஆம் ஆண்டு திருமண தினத்தை மகிழ்ச்சியாகக் கொண்டாடினார். திருமணத்திற்குப் பிறகு சினிமாவில் நடிப்பதில் இருந்து விலகிய ப்ரீத்தி ஜிந்தா தற்போது ஐபிஎல் இல் பஞ்சாப் அணியின் உரிமையாளராக தற்போது இருந்து வருகிறார். 


50 வயதில் இவ்வளவு அழகா!






பஞ்சாப் அணி விளையாடும் ஒவ்வொரு ஆட்டத்தின்போதும் விளையாட்டு அரங்கத்திற்கு வந்து தனது அணியின் வீரர்களை உற்சாகப்படுத்த தவறுவது இல்லை ப்ரீத்தி. ஒரு சிக்ஸ் அடித்தால் குஷியாவது, விக்கெட் விழுந்தால் சோகமாக கன்னத்தில் கைவைத்து உட்காருவது என அரங்கத்தில் அவரது செயல்களை ரசிகர்கள் எப்போதும் ரசிப்பது உண்டு.


 






இந்த ஆண்டு பஞ்சாப் டெல்லி அணிகளுக்கு இடையிலான போட்டியில் ப்ரீத்தி ஜிந்தா கலந்துகொண்டார். இதில் அவர் சிவப்பு நிறத்தில் ஒரு ஆடை அணிந்து நெற்றியில் பெரிய பொட்டு ஒன்றை வைத்து அவிழ்த்துவிட்ட சிகை அலங்காரத்துடன் காணப்பட்டார். அவரைப் பார்த்த ரசிகர்களுக்கு இன்னும் ஒரு வருஷத்தில் அவருக்கு 50 வயதாகப் போகிறது, ஆனால் அவரைப் பார்த்தால் முதல் படத்தில் பார்த்த அதே அழகோடு தான் இருக்கிறார். நடிகர் நடிகைகளுக்கு வயதாகும் போது அவர்களின் முதரிச்சியை வைனுடன் ஒப்பிடுவார்கள். அப்படி ஒரு தேர்ந்த வைனைப் போல் ப்ரீத்தி ஜிந்தா முதிச்சியடைந்து வருவதாக என மீம்ஸ் பகிர்ந்து அவரது அழகைப் பாராட்டி வருகிறார்கள் ரசிகர்கள்.