கயிற்றில் தொங்கியபடி இந்திய தேசியக்கொடியை பிடித்து அக்‌ஷய் குமார் மேடையில் விளையாட்டரங்கத்துக்கு வருகைத் தந்தார்.


ஐ.பி.எல்


2024ஆம் ஆண்டிற்கான  ஐ.பி.எல் சீசன் 17 இன்று (மார்ச் 22) தொடங்கியுள்ளது உள்ளது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், குஜராத் டைட்டன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் இந்த ஆண்டு கோப்பையைக் கைப்பற்ற களமிறங்க இருக்கிறார்கள்.


அதன்படி, முதல் லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோத உள்ளன. இந்தப் போட்டி சென்னை எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற உள்ளது. மேட்ச் தொடங்குவதற்கு  முன்னர், பிரம்மாண்ட கலை நிகழ்ச்சிகளும் சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்று வருகின்றன.


இந்தக் கலை நிகழ்ச்சியில் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான், நடிகர்கள் அக்‌ஷய் குமார், டைகர் ஷெரப், பாடகர்கள் சோனு நிகாம், ஸ்வேதா மோகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்தத் தொடக்க விழாவில் பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் வழக்கம் போல் எல்லாரும் வியந்துபோகும் படியான ஸ்டண்ட் காட்சி ஒன்றை செய்து ரசிகர்களை மிரள வைத்துள்ளார்.


கயிற்றில் தொங்கியபடி தேசிய கொடி ஏந்திய அக்‌ஷய் குமார் 






பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமாரை இந்திய சினிமாவின் குட்டி டாம் க்ரூஸ் என்றுகூட சொல்லலாம். எப்போது ஏதாவது மாச்சோவாக செய்து ரசிகர்களை கவர்வதற்கு அதிகம் முனைப்புக் காட்டுபவர் அவர். தற்போது இவருடடன் பாலிவுட்டின் மற்றொரு ஸ்டண்ட் ஸ்பெஷல் நடிகரான டைகர் ஷ்ராஃப் இணைந்துள்ளார்.


இவர்கள் இருவரும் இணைந்து நடித்துள்ள படம் தான் ‘படே மியா சோட்டே மியா’. ஆக்‌ஷன் த்ரில்லர் படமாக உருவாகி இருக்கும் இந்தப் படம் வரும் ஏப்ரல் 10ஆம் தேதி திரையரங்கில் வெளியாக இருக்கிறது. இந்தப் படத்தின் ப்ரோமோஷனாக இருவரும் இணைந்து தொலைக்காட்சிகளில் சமூக வலைதளங்களில் தொடர்ச்சியாக வீடியோ வெளியிட்டு வருகிறார்கள்.


தற்போது ஐ.பி.எல் தொடக்க விழாவில் தங்களது படத்தை சேர்த்து ப்ரோமோட் செய்யும் விதமாக இந்தத் தொடக்க விழாவில் அவர்கள் கலந்துகொண்டுள்ளார்கள். இந்த நிகழ்ச்சியில் நடிகர் அக்‌ஷய் குமார் கயிற்றில் தொடங்கியபடி கையில் ஒரு தேசியக் கொடியை ஏந்தியபடி விளையாட்டு அரங்கத்தில் தோன்றி ரசிகர்களை கவர்ந்துள்ளார். பின் அக்‌ஷய் குமார் மற்றும் டைகர் ஷ்ராஃப் ஆகிய இருவரும் தேசியக் கொடியை ஏந்தியபடி பைக்கில் சென்று விளையாட்டு மைதானத்தில் வலம்வந்தார்கள். இவர்களின் இந்த நிக்ழ்ச்சி ஐபிஎல் தொடக்க விழாவைக் காண மைதானத்துக்கு வந்த ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.