நீதிக்கு புறம்பாக யாரெல்லாம் செயல்படுகிறார்களோ - அவர்களுக்கு எதிராக விஸ்வரூபம் எடுப்பேன்-மதுரை விமான நிலையத்தில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அதிரடி.

 

தேர்தல் களத்தில் ஓ.பி.எஸ்.,


தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 19- தேதி அறிவிக்கப்பட்டிருக்கிறது. மொத்தம் 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெறும் நிலையில், தமிழ்நாட்டுக்கு முதல்கட்டத்திலேயே தேர்தல் நடைபெறுகிறது. தமிழ்நாடு உள்பட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடக்க உள்ளது. இந்நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியில் சுயேட்சை சின்னத்தில் ஒரு தொகுதியில் ஓபிஎஸ் போட்டி என அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். தமிழ்நாடு பாஜக கூட்டணியில் இணைந்துள்ள ஓபிஎஸ் அணி, எத்தனை தொகுதியில் போட்டியிட உள்ளது, எந்த தொகுதியில் போட்டியிட உள்ளது என கேள்விக்குறியாக இருந்தது. மேலும் பாஜக மற்றும் ஓபிஎஸ் அணியினரிடையே கூட்டணி உடன்பாடு குறித்து பெரும் இழுபறி ஏற்பட்டது. இந்நிலையில் ”தேசிய ஜனநாயக கூட்டணியில் ஒரு தொகுதியில் போட்டியிடுகிறோம். இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கு நிலுவையில் இருப்பதால், சுயேட்சை சின்னத்தில் போட்டியிடுகிறோம். மேலும் அந்த ஒரு தொகுதியான ராமநாதபுரம் தொகுதியில், தொண்டர்களின் பலத்தை நிரூபிக்கும் வகையில், நானே களத்தில் இறங்க முடிவு எடுத்துள்ளேன் என்று யாரும் எதிர்பார்க்காத அதிரடி அறிவிப்பை ஓ.பி.எஸ்., வெளியிட்டிருந்தார். இந்நிலையில் இன்று மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.


ஓ.பி.எஸ்., செய்தியாளர் சந்திப்பு



 

ராமநாதபுரத்தில் போட்டியிடுவது தேர்ந்தெடுத்தது குறித்த கேள்விக்கு

 

ராமநாதபுரத்தில் ராஜா சேதுபதி ஆட்சிக்கு உட்பட்டது, எனவே அந்த மக்கள் நீதி மற்றும் தர்மத்தின் படி நீதி வழங்குவார்கள் என்பது கடந்த காலத்தின் வரலாறு, ஆகவே இந்த தொண்டர்களை மீட்கின்ற தர்மயுத்தம் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்ற நான் நீதி கேட்டு தான், நீதிக்கு உரிய தீர்ப்பை ராமநாதபுரம் மக்கள் வழங்குவார்கள் என்று எண்ணித்தான் ராமநாதபுரம் தொகுதியில் நிற்கின்றேன்.

 

தி.மு.க., வாக்குறுதிகள் பாஜகவிற்கு எதிராக உள்ளது குறித்த கேள்விக்கு

 

அதை அவர்களிடம் தான் கேட்க வேண்டும்.

 

திருச்செந்தூரில் விஸ்வரூபம் தரிசனம் செய்த குறித்த கேள்விக்கு

 

நீதிக்கு புறம்பாகவும் அநீதிக்கு எதிராகவும் யாரெல்லாம் செயல்படுகிறார்களோ, அவர்களுக்கு எதிராக விஸ்வரூபம் எடுப்பேன்.

 

அ.தி.மு.க., சின்னம் மற்றும் கட்சியை மீட்டெடுப்பீர்கள் என்று உங்கள நம்பி உள்ள தொண்டர்கள் நிலை குறித்த கேள்விக்கு

 

சட்டப்படி வழக்கு தொடரப்பட்டு அது இன்னும் நிலுவையில் உள்ளது, தொடர்ந்து அந்த வழக்கை நடத்தி நாங்கள்தான் வெற்றி பெறுவோம் என்று தெரிவித்தார்.