Continues below advertisement

தமிழ் திரையுலகில் ரஜினி, கமல், சிவாஜி படங்களுக்கு ஸ்டண்ட் அமைத்து பிரபலம் அடைந்தவர் சூப்பர் சூப்பராயன். இவரை போன்று அவரது மகன் திலீப் சூப்பராயன் தமிழ், தெலுங்கு, இந்தி படங்களுக்கு ஸ்டண்ட் அமைத்து பிரபலம் அடைந்துள்ளார். இவர், விஜய், அஜித், சூர்யா, ரஜினி ஆகியோரின் படங்களுக்கும் ஸ்டண்ட் மாஸ்டராக பணியாற்றி வருகிறார். தற்போது பவன் கல்யாண் நடிப்பில் வெளியாகியுள்ள ஹரி ஹர வீர மல்லு படத்திற்கும் திலீப் சுப்பராயன் ஸ்டண்ட் மாஸ்டராக பணியாற்றியிருக்கிறார். இந்நிலையில், பெண் ஒருவர் திலீப் மீது குற்றச்சாட்டு வைத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் வீடியோக்களை பதிவிட்டு, சினிமா பாடல்களுக்கு நடனம் ஆடி பிரபலம் அடைந்தவர் இலக்கியா. இவர், பூந்தமல்லி அடுத்த காட்டுப்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் தற்கொலைக்கு முயன்றுள்ளார். அதிக ஊட்டச்சத்து மாத்திரை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றதாகக் கூறப்படுகிறது. இலக்கியா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், என்னுடைய சாவுக்கு ஸ்டண்ட் மாஸ்டர் திலீப் சுப்பராயன் தான். என்னை நம்ப வைத்து ஏமாத்தி விட்டான். நிறைய பெண்களுடன் பழக்கம் இருக்கிறது. 

Continues below advertisement

கடந்த 6 வருடங்களாக அவருடன் இருந்திருக்கிறேன். அதைக்கேட்டால் என்னை போட்டு அடிக்கிறான். நானும் பொறுத்து பொறுத்து பார்த்தும் முடியலை. இதுவும் போட்டா என்ன அடி அடினு அடிப்பா எனக் குறிப்பிட்டு அந்த ஸ்டோரியில் திலிப் சுப்பராயன் புகைப்படத்ததையும் பகிர்ந்திருக்கிறார். இதுதொடர்பான தகவல் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. மேலும், தற்கொலைக்கு முயன்ற இலக்கியா போரூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.