2022ஆம் ஆண்டுக்கான கிராமி விருதுகள் வழங்கும் விழா இன்று பிரம்மாண்டமான முறையில் நடைபெற்றது. உலகம் முழுவதுமுள்ள இசைக் கலைஞர்கள், இசைக்கென ஆண்டுதோறும் வழங்கப்படும் உயரிய விருதுகள் கிராமி விருதுகள்.


இந்த ஆண்டுக்கான கிராமி விருதுகள் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் இன்று நடைபெற்றது.


இதில் அமெரிக்காவில் பிறந்தவரும் கர்நாடகாவில் வசித்து வருபவருமான ரிக்கி கேஜ் தனது டிவைன் டைடஸ் எனும் இந்திய இசை ஆல்பத்துக்காக கிராமி வென்று அசத்தியுள்ளார். ரிக்கி கேஜ் மூன்றாவது முறையாக கிராமி வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.


அதேபோல், கிராமி விருது விழாவில் கலந்துகொண்ட பெர்க்லீ இந்தியன் குழும நிறுவனர் அனெட் பிலிப் காஞ்சிபுரம் சேலையில் ரெட் கார்ப்பெட்டில் நடந்து வந்தது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. மேலும், இந்திய நெசவாளர்களால் தன் புடவை உருவாக்கப்பட்டது என்று கூறிய பிலிப், "எனது நாடு மற்றும் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் புடவை அணிவது குறித்து நான் மகிழ்ச்சியாக உணர்கிறேன்" எனக் கூறினார்


ஹாரி ஸ்டைல்ஸின் 'ஹாரிஸ் ஹவுஸ்' சென்ற ஆண்டின் சிறந்த ஆல்பம், சிறந்த பாப் குரல் ஆல்பம் விருதுகளையும் வென்றது. லிசோவின் 'அபௌட் தட் டைம்'  இந்த ஆண்டின் சாதனை ஆல்பம் விருதையும் வென்றது. 


இந்நிலையில் விருது வென்றவர்களின் மொத்த பட்டியலைக் காணலாம்.




    • சிறந்த புதிய இசைக்கலைஞர் - சமாரா ஜாய் (Samara Joy)

    • இந்த ஆண்டின் சிறந்த பாடல் - அடிலின் ஈஸி ஆன் மீ மற்றும் பெயான்ஸின் பிரேக் மை சோல்

    • சிறந்த பாப் சோலோ பெர்ஃபாமன்ஸ் -  பாடகி அடில் - ஈஸி ஆன் மீ (Easy on me)

    •  






  • சிறந்த நடனம் - எலக்ட்ரானிக் இசை ஆல்பம் - அமெரிக்க பாடகி பெயான்ஸ் - ரெனைசன்ஸ் (Renaissance)

  • ஆண்டின் சாதனை ஆல்பம் - லிசோவின் 'அபௌட் டேம் டைம்' (About Damn Time)

  • இந்த ஆண்டின் பாடல் - போனி ரெய்ட்டின் ‘ஜஸ்ட் லைக் தட்’ (Just Like That)

  • சிறந்த ராப் ஆல்பம் - கெண்ட்ரிக் லேமரின் மிஸ்டர் மொரேல் அண்ட் த பிக் ஸ்டெப்பர்ஸ் (Mr. Morale & the Big Steppers)

  • நகர்ப்புற இசை ஆல்பம் - பேட் பன்னியின் உன் வெரானோ ஸின் டி (Un Verano Sin Ti)

  • சிறந்த R&B பாடல் - பெயான்ஸின் கஃப் இட் (Cuff It)

  • சிறந்த பாப் குரல் ஆல்பம் - ஹாரி ஸ்டைலின் ஹாரிஸ் ஹவுஸ் (Harry’s House)

  • சிறந்த இரட்டை பாப் பாடகர்கள் அல்லது குழு பெர்ஃபாமன்ஸ் - அன்ஹோலி (Unholy) ஆல்பத்துக்காக சாம் ஸ்மித் மற்றும் கிம் பெட்ராஸ்

  • சிறந்த நாட்டுப்புற ஆல்பம் - வில்லீ நெல்சனின் எ பியூட்டிஃபுல் டைம் (A Beautiful Time)

  • விஷுவல் மீடியாவிற்கான சிறந்த பாடல் தொகுப்பு  - என்காண்டோ பட இசைக் கலைஞர்கள்


இந்நிலையில், மொத்தம் 32 கிராமி விருதுகள் வென்று அதிக முறை கிராமி விருதுகள் வென்ற நபர் எனும் சாதனையை பெயான்ஸ் படைத்துள்ளார்.