திரையரங்களுக்கு நிகராக ஓடிடி தளங்களும் இந்தியாவில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. ஓடிடி தளங்களுக்கு உள்ள வரவேற்பை பொறுத்து சில  ஆபாச ஓடிடி தளங்களும் இந்தியாவில் இயங்கி வருகின்றன. இந்த ஓடிடி தளங்கள் திரைப்படங்கள், வெப்சீரிஸ் என்ற பெயரில் ஆபாச படங்களை தயாரித்து வெளியிட்டு வந்தனர். 

ஆபாச ஓடிடி தளங்களுக்கு தடை:

இதுபோன்ற ஆபாச ஓடிடி தளங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்று தொடர்ந்து பலரும் வலியுறுத்தி வந்தனர். இந்த நிலையில், ஆபாச காட்சிகள் நிறைந்த 25 ஓடிடி தளங்களுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. 

அந்த 25 ஓடிடி தளங்களின் முழு விவரம்:

1. ஆல்ட் பாலாஜி 2.உல்லு3. பிக் ஷாட்ஸ் ஆப்4. டெசி ப்ளிக்ஸ்5. பூமக்ஸ்6. நியோன்எக்ஸ் விஐபி7. நவரசா லைட்8.குலாப்9. கங்கன்10. புல்11. ஷோ ஹிட்12.ஜல்வா13. வாவ் என்டர்டெயின்மெண்ட்14.லுக் என்டர்டெயின்மென்ட்15. ஹிட் ப்ரைம்16.பூஜி17.பெனியோ18.ஷோ எக்ஸ்19.சோல் டாக்கீஸ்20. அட்டா டிவி21. ஹாட் எக்ஸ் விஐபி22. குல்சுல் 23. மூட் எக்ஸ்24.ட்ரிப்ளிக்ஸ்25.மோஜோப்ளிக்ஸ்

தகவல் தொழில்நுட்ப சட்டத்தின்படி இந்த செயலிகளுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அரசு இந்த செயலிகளுக்கு எச்சரிக்கை விடுத்த நிலையில், தற்போது மிக கடுமையாக இந்த செயலிகளை தடை விதிக்க நடவடிக்கை எடுத்துள்ளது. 

இந்த செயலிகளை இந்தியாவில் லட்சக்கணக்கானோர் பயன்படுத்தி வருகின்றனர். ஓடிடி தளங்கள் என்ற பெயரில் இந்த செயலிகள் ஆபாச படங்களை தயாரித்து வெளியிட்டு வருகின்றனர். 

இன்று செல்போன்களை அனைத்து தரப்பினரும் பயன்படுத்தி வருவதால், இந்த செயலிகளால் வளர் பருவத்தினர் மற்றும் இளைஞர்கள் தவறான பாதைக்குச் செல்வதற்கு வாய்ப்புகள் அதிகம் என்று சமூக ஆர்வலர்கள், கல்வியாளர்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர். மேலும், நாட்டில் நடக்கும் பாலியல் குற்றங்களுக்கும் இதுபோன்ற செயலிகளும் ஒரு காரணம் என்றும் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.