இந்திய அணியின் கேப்டனாக கிரிக்கெட்டில் மாஸ் காட்டிய ஷிகர் தவான் பாலிவுட்டில் அறிமுகமாகிறார். சூப்பர் ஸ்டார் ரஜினியின் காதலியாகவும், வலிமை படத்தின் அஜித் உடன் நடித்த ஹூமா குரேஷியுடன் அவர் டான்ஸ் ஆடும் புகைப்படம் ஒன்று சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகி வருகிறது. 


 



 


நவம்பர் 4 வெளியாகவிருக்கும் காமெடி ட்ராமா :


ஹூமா குரேஷி மற்றும் சோனாக்‌ஷி சின்கா நடித்திருக்கும் Double XL திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமாகிறார் ஷிகர் தவான். காமெடி ட்ராமா படமாக உருவாகியுள்ள Double XL திரைப்படத்தை சத்திரம் ரமணி இயக்க டி-சீரிஸ், வக்காவ் பிலிம்ஸ், ரெக்லைனிங் சீட்ஸ் சினிமா மூவரும் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர். படத்தின் பணிகள் அனைத்தும் முழுவதுமாக முடிவடைந்த நிலையில் படத்தினை நவம்பர் 4ம் தேதியன்று நெட்பிளிக்ஸில் வெளியாகவுள்ளது என அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. 


 






 


உடல் பருமன் கொண்ட இரு பெண்களின் கதை :


உடல் எடை அதிகமான ப்ளஸ்-சைஸ் உடைய இரண்டு பெண்களின் விளையாட்டு வாழ்க்கையை மையமாக வைத்து காமெடி கலந்து எடுக்கப்பட்ட திரைப்படம் இது என கூறப்படுகிறது. இப்படத்தில் உடல் பருமன் கொண்ட இரு பெண்களாக வருகிறார்கள் ஹூமா குரேஷி மற்றும் சோனாக்ஷி சின்ஹா. சாய்ரா கண்ணா எனும் கதாபாத்திரத்தில் ஒரு ஃபேஷன் டிசைனராக சோனாக்ஷி சின்ஹாவும், ஹூமா குரேஷி,  ராஜ்ஸ்ரீ திரிவேதி எனும் கதாபத்திரத்திலும் நடிக்கிறார்கள் என கூறப்படுகிறது.  மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் நடிகர் மஹத் ராகவேந்திரா. இவர் ஏற்கனவே மங்காத்தா, ஜில்லா, மாநாடு உள்ளிட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது இந்த Double XL திரைப்படம் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாகிறார்.  


 






 


ஷிகர் தவான் நடிக்க காரணம் :



ஷிகர் தவான் இப்படத்தில் நடித்தது குறித்து தெரிவிக்கையில் "இந்த திரைப்படத்தின் கதை எனது வாழ்க்கையில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்திய நாட்டிற்காக கிரிக்கெட் விளையாடும் போது நான் எப்போதும் ஒரு நெருக்கடியான ஒரு சூழலை உணர்வேன். என்னுடைய ஒரே பொழுதுபோக்கு நல்ல திரைப்படங்களை பார்ப்பது மட்டுமே. எனக்கு இந்த பட வாய்ப்பு கிடைத்தபோது அதை நான் முயற்சி செய்ய விரும்பினேன். கதை எனக்கு பிடித்துப்போகவே நடிக்க ஒப்புக்கொண்டேன். இப்படம் நிச்சயமாக ஒரு அழகான அழுத்தமான தகவலை மக்களுக்கு கொண்டு சேர்க்கும் என நம்புகிறேன்" என்றார்.