Indian 2 Update: அலறப்போகும் ஸ்பீக்கர்கள்.. “இந்தியன் 2” படத்தின் முதல் பாடல் வெளியாகும் நேரம் அறிவிப்பு!

Indian 2 First Single Paaraa: ஷங்கர் இயக்கியுள்ள இந்தியன் 2 படம் ஜூலை 12 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் முதல் பாடல் நாளை வெளியாகிறது.

Continues below advertisement

கமல்ஹாசன் நடித்துள்ள இந்தியன் 2 படத்தின் முதல் பாடல் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

Continues below advertisement

லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தை ஷங்கர் இயக்கியுள்ளார். இந்தியன் 2 படத்தில் கமல்ஹாசன், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத்தி சிங், சித்தார்த், பிரியா பவானி ஷங்கர், மாரிமுத்து, சமுத்திரகனி, பாபி சிம்ஹா உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். அனிருத் இப்படத்துக்கு இசையமைக்கிறார். இந்தியன் 2 படம் 1994 ஆம் ஆண்டு கமல்ஹாசன் - ஷங்கர் கூட்டணியில் வந்த இந்தியன் படத்தின் தொடர்ச்சியாகும். 

அதேசமயம் இப்படத்தின் 3ஆம் பாகமும் தயாராகி வருகிறது. இந்தியன் 2 படம் வெளியான 6 மாதத்தில் அடுத்த பாகம் வெளியாகும் என சில தினங்களுக்கு முன் கமல் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இந்தியன் 2 படத்தின் முதல் பாடலான பாரா நாளை மாலை 5 மணிக்கு வெளியாகும் என்றும், அதற்கான ப்ரோமோ இன்று மாலை 5 மணிக்கு வெளியிடப்படும் எனவும் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 

இந்த படத்தின் எப்படிப்பட்டதாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு இப்போதே ரசிகர்களிடத்தில் எழுந்துள்ளது. நடப்பாண்டில் வீழ்ச்சியடைந்துள்ள தமிழ் சினிமாவை இரண்டாம் பாதியில் வெளியாகும் படங்கள் மீட்டெடுக்கும் என நம்பிக்கையில் திரையுலகம் உள்ளது. அந்த பட்டியலில் இந்தியன் 2 படமும் இடம் பெற்றுள்ளது. 

இந்தியன் படம் 

1994 ஆம் ஆண்டு வெளியான இந்தியன் படம் சமூகத்தில் நடக்கும் ஊழலை மையப்படுத்தியும், அதனை கண்டு கொதித்தெழும் சுதந்திர போராட்ட வீரர் பற்றிய கதையாகவும் அமைந்தது. இப்படத்தில் இரட்டை வேடத்தில் கமல் நடித்தார். மேலும் சுகன்யா, மனிஷா கொய்ராலா, ஊர்மிளா, கவுண்டமணி, செந்தில் என பலரும் நடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Continues below advertisement