இந்தியன் 2 (Indian 2 )


ஷங்கர் இயக்கத்தில் கமல் நடித்து 1996 ஆம் ஆண்டு வெளியான படம் இந்தியன் . தமிழ் சினிமாவில் வசூல் சாதனை படைத்த படங்களில் ஒன்று இந்தியன் 2. சுமார் 24 ஆண்டுகளுக்குப் பின் தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் வெளியாக இருக்கிறது. கடந்த 2019 ஆம் ஆண்டு இந்தியன் 2 படத்தின் அறிவிப்பு வெளியானது. இதனைத் தொடர்ந்து கொரோனா நோய்த் தொற்றுப் பரவல் , படப்பிடிப்பில் விபத்து என பல்வேறு காரணங்களால் இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஐந்து ஆண்டுகள் நடைபெற்றது. லைகா ப்ரோஷக்‌ஷன்ஸ் தயாரித்துள்ள இப்படத்தில் கமல்ஹாசன் சேனாபதியாக நடித்துள்ளார். சித்தார்த் , பாபி சிம்ஹா , எஸ்.ஜே சூர்யா , காஜல் அகர்வால் , ரகுல் ப்ரீத் , பிர்யா பவானி சங்கர் உள்ளிட்டவர்கள் நடித்துள்ளார்கள். இவர்கள் தவிர்த்து மறைந்த நடிகர்கள் மனோபாலா , விவேக் , மாரிமுத்து உள்ளிட்டவர்களும் இப்படத்தில் நடித்துள்ளார்கள். 



இன்றை அரசியல் சூழலில் இந்தியன் தாத்தா திரும்பி வந்தால் எப்படி இருக்கும் என்கிற கற்பனையே இந்தியன் 2 உருவான பின்னணி என்று படட்தின் இயக்குநர் ஷங்கர் தெரிவித்துள்ளார் . ஷங்கரின் பிரம்மாண்ட காட்சி அமைப்புகள் , கமலின் நடிப்பு , அனிருத்தின் மிரட்டும் பின்னணி இசை மற்றும் பிற கதாபாத்திரங்கள் என குடும்பங்கள் அனைவரையும் கவரும் ஆக்‌ஷன் என்டர்டெயினராக இப்படம் இருக்கும் என்று எதிர்பார்க்கலாம் . 


இந்தியன் 2 டிரைலர் (Indian 2 Trailer)


பல்வேறு சவால்களைக் கடந்து இந்தியன் 2 படம் வரும் ஜூலை மாதம் 12 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இந்தியன் 2 படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது.