கடந்த 1996ம் ஆண்டு இயக்குனர் சங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் இரட்டை கதாபாத்திரத்தில் நடித்து விமர்சனரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் ‘இந்தியன் - 2’. ஊழலை மையமாக கொண்டு நடக்கும் மைய கதையை மிக அழகாக வெளிப்படுத்தி இருப்பார் இயக்குனர் சங்கர். அப்போதிலிருந்தே இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகம் வெளிவராத என அனைத்து தரப்பு மக்களும் எதிர்பார்த்தனர். 


அவர்களுக்கு தீனி போடும் விதமாக பல்வேறு சர்ச்சைகள், தடங்கல்களுக்கு மத்தியில் இந்தியன் -2 படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.


லைகா நிறுவனம் தயாரிக்கும் படத்தில் உலக நாயகன் கமல்ஹாசன் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க, இவருடன் காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், சித்தார்த், பிரியா பவானி சங்கர், பாபி சிம்ஹா, சமுத்திரக்கனி உள்ளிட்ட பல்வேறு நட்சத்திர பட்டாளங்கள் நடித்து வருகின்றனர். மேலும், இந்த படத்திற்கு அனிருத் இசைமைத்து வருகிறார். 


இந்த படம் தொடங்கப்பட்டபோது படப்பிடிப்பில் நகைச்சுவை நடிகர் விவேக் மற்றும் நடிகர் நெடுமுடி வேணு நடித்திருந்தனர். இந்தநிலையில், இவர்கள் சமீபத்தில் உடல்நிலை காரணமாக மரணமடைந்தனர். இதையடுத்து, இவர்களின் காட்சிகளை படத்தில் கொண்டு வர இயக்குனர் சங்கர் புது முயற்சியை மேற்கொள்ள இருக்கிறார்.


அதன்படி, மறைந்த நகைச்சுவை நடிகர் விவேக் மற்றும் நடிகர் நெடுமுடி வேணு ஆகியோரின் காட்சிகளை புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி படமாக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


முன்னதாக இந்த மாத தொடக்கத்தில் இயக்குனர் சங்கர் இந்தியன் - 2 படத்தை தைவான் மற்றும் தென்னாப்பிரிக்காவில் எடுத்தார். தென்னாப்பிரிக்காவில் தீவிர ரயில் ஆக்‌ஷன் காட்சி ஒரு எடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியது. தொடர்ந்து. தென்னாப்பிரிக்காவில் எடுக்கப்பட்ட படப்பிடிப்பு அட்டவணை கடந்த 4 நாட்களுக்கு முன்பு முடிவடைந்தநிலையில், இப்படத்தில் அடுத்தகட்ட படப்பிடிப்பு வருகின்ற மே மாதம் தொடங்க திட்டமிட்டுள்ளார். இந்த இடைப்பட்ட கேப்பில் இயக்குனர் சங்கர், ராம் சரணை வைத்து இயக்கும் ’கேம் சேஞ்சர்’ படத்தின் கிளைமாக்ஸ்களை இயக்க இருக்கிறார். 






இந்தியன் 2 படப்பிடிப்பிற்கு பிறகு நடிகர் கமல்ஹாசனுடன் இருக்கும் படத்தை இயக்குனர் ஷங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்தார். அதில், “இந்த பவர் பேக் செய்யப்பட்ட அட்டவணைக்கு நன்றி @ikamalhaasan சார் 🔥 மே மாதம் மீண்டும் சந்திப்போம்! க்ளைமாக்ஸுக்கு #Indian2Gamechanger இல் இருந்து நகர்கிறேன்!!!” என பதிவிட்டு இருந்தார்.