இந்தியன் 2 


பிரமாண்டத்திற்கு பெயர்போன இயக்குநர் ஷங்கர் இயக்கியுள்ள இந்தியன் 2 படம் வரும் ஜூலை 12ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இந்தியன் 2 படத்தின் இசை வெளியீடு சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய இயக்குநர் ஷங்கர் இந்தியன் 2 படத்தின் அனுபவங்களை பகிர்ந்துகொண்டார். மேலும் அனிருத்தின் இசை, எஸ் ஜே சூர்யாவின் நடிப்பைப் பற்றி பேசிய அவர் மறைந்த நடிகர் விவேக்கையும் நினைவுகூர்ந்தார்.


அனிருத்தின் இசை உங்களுக்கு எனர்ஜி கொடுக்கும்


அனிருத்தின் இசையைப் பற்றி பேசிய ஷங்கர் “இன்று காலை தூக்க கலக்கத்தில் அனிருத்தின் ஃபைனர் மிக்ஸ் கேட்டேன். உடனே சுறுசுறுப்பாகி விட்டது. அனிருத்தின் இசை உங்களுக்கும் ஒரு எனர்ஜி கொடுக்கும் என்று நம்புகிறேன். அனிருத் ஒரு டியூன் போட்டால் நான் அதை 80 சதவீதம் ஓகே என்று சொல்லிவிடுவேன். ஆனால் நீங்கள் 100 சதவீதம் ஓகே சொல்லும் வரை அவர் டியூன் போடுவார். அனேகமாக அவர் “தாத்தா வராரு” பாடலுக்கு தான் ரொம்ப கஷ்டப்பட்டிருப்பார் என்று நினைக்கிறேன். ஏனால் அவர் அவ்வளவு குத்துப்பாடலுக்கு இசையமைத்திருக்கிறார். ஆனால் எந்த ஜானர் என்றாலும் சிறப்பாக இசையமைக்கக் கூடியவர் அனிருத்" என்றார்.


எஸ் ஜே சூர்யா ஒரு பர்ஃபெக்ட் நடிகர்


நடிப்பு அரக்கன் எஸ் ஜே சூர்யாவைப் பற்றி பேசியபோது “எஸ் ஜே சூர்யா ஒரு டேக்கில் முடிக்க மாட்டார். பர்ஃபெக்ட்டா வர வரைக்கும் பத்து டேக் வரை நடித்துக் கொண்டே இருப்பார். அவர் ஒரு பெர்ஃபெக்ட் ஆன நடிகர். உண்மையில் இந்தப் படத்தில் ஒரு வித்தியாசமான ரோலில் அவர் நடித்திருக்கிறார்." என்றார் ஷங்கர்.


‘விவேக் நம்முடன் என்றும் இருப்பார்’


மறைந்த நடிகர் விவேக் பற்றி பேசிய ஷங்கர் இப்படி கூறினார் " சின்னக் கலைவாணர் விவேக் இப்போ நம்மளுடன் இல்லை. ஆனால் இந்தப் படம் வந்த பிறகு அவர் நம்முன் என்றும் இருப்பார். கமலுக்கும் விவேக்குக்கும் இடையிலும் ஒரு நல்ல கெமிஸ்ட்ரி இந்தப் படத்தில் இருக்கிறது" எனப் பேசியுள்ளார்.