Indian 2 Audio Launch: நடிகர் கமல்ஹாசன் இயக்குநர் ஷங்கர் கூட்டணியில் உருவாகியுள்ள இந்தியன் 2 திரைப்படத்தின் பிரமாண்ட இசை வெளியீட்டு விழா இன்று (ஜூன் 1) மாலை 6 மணிக்குத் தொடங்கி நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகிறது.


இந்தியன் எனும் வார்த்தை:


இதில் நடிகர் பாபி சிம்ஹா கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், ”இயக்குநர் ஷங்கர் மற்றும் கமல்ஹாசன் காம்போ இணைவது அரிதிலும் அரிது. இந்தியன் என்பது மிகப்பெரிய ஒரு வார்த்தை. அப்படி ஒரு வார்த்தையைக் கொண்ட ஒரு படத்தில் நானும் நடிப்பது எனக்கு பெருமையாக இருக்கிறது. 1996ஆம் ஆண்டு வெளியான இந்தப் படத்தை நாம் எல்லாம் பார்த்திருக்கிறோம்.


குட்லக் பேபி:


ஆனால் இப்போது இந்தப் படத்தில் ஒரு இடத்தில் நானும் இருப்பது தான் எனக்கு பெருமையாக இருக்கிறது. இந்த நேரத்தில் கமல்ஹாசன் மற்றும் இயக்குநர் ஷங்கருக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். அதோடு தயாரிப்பு நிறுவனமான லைகா மற்றும் சுபாஷ் ஆகியோருக்கும் ரெட் ஜெயண்ட் உதயதி ஸ்டாலின் ஆகிய எல்லோருக்கும் நன்றி சொல்கிறேன்.


இப்படி ஒரு வாய்ப்பு யாருக்கும் எளிதில் யாருக்கும் கிடைக்காது. அந்த வாய்ப்பு எனக்கு கிடைத்து இருக்கிறது. இது எனக்கு மிகப்பெரிய கொடுப்பனை என்றே நான் நினைக்கிறேன். கமல்ஹாசனுடன் திரையில் வருவது என்பது சாதாரண விசயம் இல்லை. அந் தவகையில் நான் ஒரு குட்லக் பேபி” என்று பேசினார்


அப்போது அவரிடம் இந்த படத்தில் நீங்கள் எந்த கேரக்டரில் நடிக்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “இதை நீங்கள் சங்கர் சாரிடம் தான் கேட்க வேண்டும். ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டும் என்றால் சங்கர் சார் எனக்கு அளித்த இந்த வாய்ப்பு ஒரு கிப்ட் அவ்வளவு தான் ” என்றார்.


நிறைவேறிய ஆசை:


இதனிடையே சில பழைய நினைவுகளையும் பகிர்ந்து கொண்டார் அவர், ”பாய்ஸ் திரைப்படத்தின் ஆடிஷன்போது நான் கொடைக்கானலில் எடுத்த புகைப்படங்கள் எல்லாவற்றையும் அனுப்பி வைத்தேன். அப்போது பாய்ஸ் படத்தில் எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்து விடாதா என்று ஆசைப்பட்டேன். அது எல்லோருக்கும் ஏற்படக்கூடிய ஆசைதான். அந்த ஆசை என்னுடைய வாழ்வில் இப்போது நடந்துள்ளது” என்றார்.


தொடர்ந்து பேசிய அவர், “தமிழ்நாட்டின் சூப்பர் ஹீரோ படத்தில் நானும் ஒரு ஆளாக இருப்பது பெரும் பாக்கியமாக நான் கருதுகிறேன். முன்பெல்லாம் எனக்கு நிறைய கோபம் வரும். ஆனால் இப்போது அதை கட்டுப்படுத்தி விட்டு என்னுடைய வேலையை சரியாக செய்கிறேன். ஒரு மெச்சூரிட்டி வந்தால் கோபம் எல்லாம் சரி ஆகி விடும். இப்போது கோபம் வருவது போல் இருந்தால் அதை நான் தவிர்த்து விடுகிறேன்” எனப் பேசியுள்ளார் பாபி சிம்ஹா.