தமிழ்நாடு முழுவதும் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி தேர்தல் சென்ஷேனாக பேசப்பட்டது நடிகர் விஜய் சைக்கிளில் வந்து ஒட்டு அளித்ததுதான். பெட்ரோல் விலையேற்றத்திற்காகத்தான் விஜய் அவ்வாறு சைக்கிளில் வந்தார் என்ற தகவல் வெளியான நிலையில் அது காரணம் அல்ல என்று விஜய் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
இயக்குநர் நெல்சன், தளபதி 65-ஐ இயக்குகிறார் என்பது அனைவரும் அறிந்ததே. சில வாரங்களுக்கு முன்பு பட பூஜை போடப்பட்டு படப்பிடிப்பு பணிகள் தொடங்கப்பட்டன. சன் பிக்சர்ஸ் இந்த திரைப்படத்தை தயாரிக்கிறது. நெல்சன் இயக்கியுள்ள ‘டாக்டர்’ பட ரிலீஸுக்குப் பிறகு, தளபதி 65 படப்பிடிப்பு வேகமெடுக்கும் என்று கூறப்பட்ட நிலையில். தேர்தல் முடிந்த கையோடு படக்குழு ஜார்ஜியா புறப்பட்டது. படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் தொடங்கி நடைபெற்றது. இதை தொடர்ந்து பட குழுவினர் மற்றும் விஜய் ஆகியோர் சென்னையில் இருந்து புறப்பட்டனர்.
ஜார்ஜியாவில் படப்பிடிப்பு நடந்துவந்த நிலையில் குளிர் மழை பொழிந்துவருவதால் படப்பிடிப்பு திட்டமிட்டபடி நடைபெறாமல் தாமதமாகி வந்ததாக தகவல் வெளியானது. இதனைத் தொடர்ந்து படப்பிடிப்பை இன்னும் இரண்டு வாரத்திற்குள் முடித்துவிட்டு ஜார்ஜியாவில் இருந்து சென்னை திரும்பப்போகிறது படக்குழு என்றும். சிறிய ஓய்வுக்கு பிறகு இரண்டாம்கட்ட படப்பிடிப்பு சென்னை மற்றும் ஹைதராபாத்தில் நடைபெறவுள்ளது என்றும் தகவல் வெளியானது.
இந்நிலையில் உலக அளவில் கொரோனா பரவல் அதிகமாகி வருவதால் ஜார்ஜியாவில் இருந்து தற்போது விஜய் மற்றும் தளபதி 65 படக்குழு மீண்டும் தாயகம் திரும்பியுள்ளது. அதே சமயம் திட்டமிட்டபடி ஜார்ஜியாவில் படமாக்கப்பட வேண்டிய காட்சிகள் அனைத்தும் படமாக்கப்பட்டுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.