பாகுபலி படத்தின் மூலம் சர்வதேச புகழ் பெற்றவர் நடிகர் பிரபாஸ். அதன் அமோக வெற்றியை தொடர்ந்து இந்தி, தமிழ் , தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகராக வலம் வர துவங்கினார். இருப்பினும் அடுத்தடுத்து அவர் நடித்த சாஹோ, ராதே ஷியாம், ஆதிபுருஷ் உள்ளிட்ட படங்கள் தோல்வியை சந்தித்தது.


இருப்பினும் கடந்த ஆண்டு வெளியான 'சலார்' திரைப்படம் ஓரளவுக்கு வெற்றியை கொடுத்து இழந்த மார்க்கெட்டை மீது கொடுத்தது. சமீபத்தில் பிரபாஸ், தீபிகா படுகோன், அமிதாப் பச்சன், கமல் உள்ளிட்டோரின் நடிப்பில் வெளியான 'கல்கி' திரைப்படம் உலகளவில் 1000 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இதன் இரண்டாம் பாகமும் வெளியாகும் என கூறப்படுகிறது. 



இந்நிலையில் அடுத்ததாக ராஜா சாப் , ஸ்பிரிட் உள்ளிட்ட படங்களில் நடிக்க கமிட்டாகி உள்ளார். அதன் தொடர்ச்சியாக துல்கர் சல்மான் - மிருணாள் தாகூர் நடிப்பில் வெளியான சூப்பர் ஹிட் திரைப்படமான 'சீதா ராமம்' திரைப்படத்தை இயக்கிய ஹனு ராகவபுடி இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் கமிட்டாகி உள்ளார் பிரபாஸ். சீதா ராமம் கதையை போலவே 1940 காலகட்டத்தில் நடைபெற்ற கதை என கூறப்படுகிறது.


மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இப்படத்தின் ஹீரோயினாக இஷ்ட பிரபலம் ஒருவர் இணைக்கிறார். 






பிரபாஸ் ஜோடியாக நடிக்க நான் நீ என்ற போட்டி நிலவுகையில் அந்த வாய்ப்பு இன்ஸ்டா பிரபலம் ஒருவருக்கு கிடைத்துள்ளது. இன்ஸ்டாகிராமில் டான்ஸ் ரீல்ஸ் மூலம் ஏராளமான பாலோவர்ஸ் பெற்றவர் இமான்வி என்ற இமான் இஸ்மாயில். சோசியல் மீடியாவில் மிகவும் பிரபலமானவராக இருக்கும் இமான்வி நடிக்கும் முதல் படமே பிரபாஸ் ஜோடியாக நடிக்க உள்ளார் என்பது மற்ற நடிகைகள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.


இப்படம் அவருக்கு திரையுலகில் நல்ல ஒரு ஓப்பனிங் பெற்று கொடுக்குமா என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம். விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.