நடிகை இலியானா கர்ப்பமாக இருப்பதை அறிவித்ததை தொடர்ந்து, தற்போது திருமணம் ஆனதை அறிவுக்கும் விதமாக மோதிர விரல் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.


நடிகை இலியானா, கர்ப்பமாக இருப்பதை ஏற்கனவே அறிவித்து விட்டார். ஆனால் இதுவரை, அவர் தன்னுடைய கணவர் யார் என்பதை அறிவிக்கவில்லை. தற்போது முதல் முறையாக காதலரோடு சேர்ந்து மோதிர விரல் போட்டோ ஒன்றை ஷேர் செய்துள்ளார் இலியானா. எனவே  ரசிகர்கள் பலரும் உங்களுக்கு திருமணம் ஆகி விட்டதா? அல்லது இது நிச்சயதார்த்த மோதிரமா? என கேள்வி எழுப்பி வருகின்றனர்.


மும்பையை சேர்ந்தவர் நடிகை இலியானா. தெலுங்கு திரை உலகின் மூலம் நடிகையாக அறிமுகமான இவர்  தொடர்ந்து தமிழில், 'கேடி' என்கிற படத்தில் அறிமுகமானார். ஆனால் இந்த படம் இவருக்கு எதிர்பார்த்த அளவிலான வெற்றியை பெற்றுத் தரவில்லை. இதனால் இலியானா தெலுங்கு திரையுலகில் கவனம் செலுத்த துவங்கினார். இவர் பல முன்னணி நடிகர்கள் மற்றும் இளம் நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து முன்னணி நடிகையாக மாறினார்.


தமிழில் நீண்ட இடைவேளைக்கு பின்னர், இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் வெளியான நண்பன் திரைப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார். இலியானா. இத்திரைப்படம் மிகப்பெரிய வெற்றி அடைந்தது. ஆனால் அதன் பின் அவர் பாலிவுட்டில் கவனம் செலுத்த தொடங்கியதால், தமிழ் - தெலுங்கு திரைப்படங்களில் கவனம் செலுத்தவில்லை. இதைத்தொடர்ந்து புகைப்பட கலைஞரான ஆண்ட்ரூ என்பவரை, காதலித்து வந்தார்.  இருவரும் திருமணம் செய்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் திடீரென கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டதாகவும், இந்த பிரிவினால் ஏற்பட்ட மன அழுத்தத்தால்  பல்வேறு சிகிச்சைகள் எடுத்து கொண்டதால் தன்னுடைய உடல் எடையும் கூடியதாக இலியானா கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது. 


காதல் தோல்வியில் இருந்து மீண்டு, உடல் எடையை குறைத்து திரைப்படங்களில் கவனம் செலுத்தி வந்த இலியானா கடந்த ஓரிரு வருடங்களாகவே,  பிரபல நடிகை கத்ரீனா கைப்பின் சகோதரர் செபஸ்டியனை காதலித்து வருவதாக சமூக வலைதளங்களில் கிசுகிசுக்கள் வெளியாகி  வருகிறது. ஆனால் சம்பந்தப்பட்ட இருவருமே இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் எதையும் வெளியிடவில்லை. இந்நிலையில் சமீபத்தில் திருமணம் செய்து கொள்வதற்கு முன்பாகவே தான் கர்ப்பமான தகவலை வெளியிட்டிருந்தார் இலியானா.


இந்நிலையில் தற்போது மோதிர விரல் புகைப்படம் ஒன்றை ஷேர் செய்துள்ளார் இலியானா. இதை கண்ட ரசிகர்கள் உங்கள் கணவரின் கைகளை மட்டும் காட்டி இருக்கீங்க, கொஞ்சம் முகத்தையும் காட்டுங்க என கோரிக்கை வைத்து வருகிறார்கள். விரைவில் தன் கணவர் யார் என்பதையும் இலியானா விரைவில் அறிவிப்பார் என்று எதிர் பார்க்கப்படுகிறது.