IleanaDCruz Viral Insta Post: இதுதான் என் உடம்பு! என் கலரு.. எதுக்கு இனி ஃபில்டர் ஆப் - வைரலாகும் இலியானாவின் இன்ஸ்டா போஸ்ட்!

உடலை அழகாக காட்டும் ஆப்களை டெலிட் செய்து விட்டதாக நடிகை இலியானா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Continues below advertisement

அழகாக காட்டும் ஆப்களை டெலிட் செய்த இலியானா 

Continues below advertisement

இது குறித்து இலியானா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “ உங்கள் உடலை ஒல்லியாக, பளப்பளப்பாக, அழகாக காட்டும் ஆப்களின் வாயிலாக  உங்களை எளிதாக மாற்றியமைக்க முடியும். ஆனால் நான் அது போன்ற ஆப்களை டெலிட் செய்துள்ளேன். இதை நினைத்த நான் பெருமிதம் கொள்கிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

இது மட்டுமன்றி, அத்துடன் தான் குண்டாக இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ள இலியானா  “ ”இதுதான் நான். என்னுடைய உடலின் ஒவ்வொரு இன்ச்சையும், வளைவையும், எல்லாத்தையும் நான் தழுவிக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டு அத்துடன் நீங்கள் அழகாக இருக்கிறீர்கள் என்ற ஹேஷ்டேக்கையும் இணைத்திருக்கிறார். 


உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட இலியானா 

முன்னதாக நடிகை இலியானா உடல்நலக்கோளாறு காரணமாக ( body dysmorphic disorder) பாதிக்கப்பட்டார். இது குறித்து பேசியிருந்த இலியானா, இதனால் தனக்கு தற்கொலை எண்ணங்கள் வந்ததாக கூறியிருந்தார். அதன் பின்னர் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இலியானா , “குறைபாடுகளுடன் இருப்பது என்பது வாழ்கையின் ஒரு பகுதி. நீங்கள் யார் என்பதை நேசிக்க கற்றுக்கொள்ள வேண்டும். நீங்கள் மனிதர்.

 

நீங்கள் குறைபாடுகளுடன் இருக்க அனுமதிக்கப்படுகிறீர்கள். அந்தக்குறைபாடுகளில் நிறைய அழகும் தனித்துவமும் அடங்கியிருக்கிறது.” என்றார்

கடந்த 2020 ஆம் ஆண்டு தனது உடலை பற்றி இன்ஸ்டாகிராமில் பதிவை வெளியிட்டு கவலைப்பட்ட இலியானா அதன் பின்னர் அந்த குறைபாடுகளில் அழகு இருப்பதையும், நாம் வெளிப்படைத்தன்மையுடன் இருக்க வேண்டும் என்பதை உணர்ந்து கொண்டதாகவும் குறிப்பிட்டு இருந்தார். 

Continues below advertisement