மலையாளத்தில் ‘மாஸ்’ காட்டும் நடிகர்களுள் ஒருவர் துல்கர் சல்மான். மலையாள நடிகர் மம்மூட்டியின் செல்ல மகனான இவர், வாயை மூடி பேசவும் படத்தில் முதன்முதலாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். கொஞ்சம் கொஞ்சமாக படங்களில் நடித்து குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, அனைவருக்கும் பிடித்த நடிகராக மாறினார். ‘ஃபீல் குட்’ படங்களாக தேர்வு செய்து நடித்து வரும் துல்கர் சல்மான் ஒரு வித்தியாசமாக ஆர்மி மேனாக நடித்து தெலுங்கில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் 'சீதா ராமம்' (Sita Ramam). அதற்கு பிறகு தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என வெளியாகி சக்கை போடு போட்டது. அப்படத்தின் ஓர் ஆண்டு நிறைவை முன்னிட்டு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அனைவருக்கும் நன்றி சொல்லும் வகையில் பதிவு ஒன்றை கடிதமாக போஸ்ட் செய்துள்ளார். 


 



"ஓர் ஆண்டை நிறைவு செய்து விட்டது முடிவை மறுக்க இயலாத எபிக் திரைப்படம். உலகில் நான் எந்த ஒரு பகுதிக்கு சென்றாலும் இப்படத்தின் மீதான தங்களின் அன்பை பகிர்ந்து கொள்பவர்களை நான் சந்திக்கிறேன். மொழி ஒரு பொருட்டல்ல. இப்படி பட்ட படங்கள் ஒரு நடிகனுக்கு கிடைப்பது பெரிய பாக்கியம். நீங்கள் கனவு கண்டதை காட்டிலும் மிகவும் அதிகமாக கொடுக்க வேண்டும் என்பது தான் எங்களை போன்ற நடிகர்களின் எண்ணம். 


ஹனு சார் - ராம் என்ற கதாபாத்திரத்தை எனக்கு கொடுத்ததற்கு எத்தனை நன்றி சொன்னாலும் போதுமானதாக இருக்காது. உங்கள் கனவை பெரிய திரையில் கொண்டு வந்ததற்கு உங்கள் தன்னலமற்ற அன்பு தான் காரணம். 


ஸ்வப்னா தத் - இந்திய சினிமாவில் சூப்பர் ஹீரோ இல்லை என யார் சொன்னார்கள்? முழு திரைப்படத்தையும் ஆதரித்த தைரியமான சூப்பர் பெண் ஹீரோ. என்னை போன்ற ஒரு நடிகரை வைத்து இப்படி ஒரு திரைப்படத்தை உருவாக்கி உள்ளீர்கள். என்னுடைய திரைப்பயணத்தை புதிய கோணத்தில் மாற்றியது நீங்கள் தான். அதற்காக உங்களுக்கும் வைஜெயந்தி மூவிஸுக்கும் நான் என்றும் கடமை பட்டவனாக இருப்பேன். 


 



அஸ்வினி தத் காரு: உங்களின் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி. நடிகர்களை நீங்கள் நடத்தும் விதமே நீங்கள் எப்படிப்பட்ட ஒரு மேவ்ரிக் தயாரிப்பாளர் என்பதை உணர்த்துகிறது. உங்களின் உழைப்பும் ஆர்வமும் தான் வைஜெயந்தி மூவிஸ் நிறுவனத்தை தூக்கி நிறுத்துகிறது. எனது காட் பாதராக இருப்பதற்கு நன்றி. 


மிருணாள் தாகூர் காரு : கடந்த காலத்தை அப்படியே கண்முன்னே கொண்டுவந்தீர்கள். சீதா மகாலக்ஷ்மி கதாபாத்திரத்துக்கு நீங்கள் மிகவும் பொருத்தமானவர். சீதா என உங்களை அழைப்பதை நிறுத்த முயற்சி செய்து பாருங்கள். நம்முடைய நட்பு, பரஸ்பர மரியாதை மற்றும் சினிமா மீது நம் இருவருக்கும் இருக்கும் காதல் தான் மிகவும் அழகாக திரையில் மொழிபெயர்ந்துள்ளது. நான் எப்போது உங்களுக்கு பின்னால் இருந்து உங்களுக்கும் உங்கள் படங்களுக்கும் ஆதரவளிப்பேன்".


துல்கர் சல்மானின் இந்த தேங்க்ஸ் கிவ்விங் லெட்டருக்கு லைக்ஸ்களும்  வாழ்த்துக்களும் குவிந்து வருகிறது.