பிரபல நடிகை இலியானா சமீபத்தில் தான் கர்ப்பமாக இருப்பதாக சமூக வலைதளங்களில் அறிவித்து இணையத்தை ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார். இலியானா தனது குழந்தையின் தந்தை குறித்த தகவல்கள் அதில் இல்லாததால், இலியானாவின் கர்ப்ப பதிவு நெட்டிசன்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

Continues below advertisement

கர்பமாக உள்ள இலியானா

மகிழ்ச்சியான அறிவிப்பை நடிகை இலியானா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட, அவர் இரண்டு பிளாக் அண்ட் ஒயிட் புகைப்படங்ககை வெளியிட்டிருந்தார். அதில் ஒன்று குழந்தை உடை, மற்றொன்று 'மாமா (Mama)' என்று எழுதிய செயின் அணிந்த புகைப்படம் ஒன்று. அவரது நலம் விரும்பிகளும், ரசிகர்களும் கமெண்ட் பிரிவில் வாழ்த்துச் செய்திகளால் அன்பைப் பொழிந்தாலும், இணையத்தின் ஒரு பகுதியினர் தந்தையைப் பற்றி அறிய ஆர்வமாக இருந்தனர். பலர் அவரை திருமணம் ஆனவரா, தந்தை யார், விவரங்களை பகிருங்கள் என்று கேள்வி கேட்டு வந்தனர். இது எதையும் கண்டுகொள்ளாத இலியானா எந்த கமென்டிற்கும் பதில் அளிக்கவில்லை.

Continues below advertisement

கன்னித்தன்மையை எப்போது இழந்தீர்கள்?

2019 ஆம் ஆண்டில், இலியானா இன்ஸ்டாகிராமில் எல்லா பிரபலங்களும் நடத்தும், 'Ask me anything' நிகழ்வை நடத்தினார். யார் வேண்டுமானாலும், எந்த கேள்வியை வேண்டுமானாலும் அவர்களிடம் கேட்கலாம் என்பதுதான் அதன் சாராம்சம். ஒரு இன்டர்வ்யூ போல ரசிகர்களுடன் உரையாட பிரபலங்கள் தேர்ந்தெடுக்கும் வழி அது. ஆனால் நடிகைகளிடம் கேட்கும்போது சில கேள்விகள் அத்துமீறுவதுண்டு. ஒரு பயனர் அவரது “கன்னித்தன்மை” பற்றி கேட்டபோது, இலியானா மிகவும் காட்டமான பதிலைக் கொடுத்தார். கேள்வியில், "எப்போது உங்கள் கன்னித்தன்மையை இழந்தீர்கள்?", என்று கேட்டார்.

தொடர்புடைய செய்திகள்: Yemen : இலவச உணவுக்காக குவிந்த மக்கள்...கூட்ட நெரிசலில் சிக்கி 79 பேர் உயிரிழப்பு... ஏமனில் சோகம்...!

முன்னாள் காதலர்

அதற்கு பதிலளித்த இலியானா, "வாவ், அடுத்தவர்கள் உறவில் அவ்வளவு ஆர்வம்? உங்கள் அம்மாவிடம் கேட்டால் என்ன பதில் சொல்வார்?" என்று திருப்பி கேட்டார். அப்போது இது வைரலாகி இருந்தது. இலியானா சில ஆண்டுகளுக்கு முன்பு ஆண்ட்ரூ நீபோனுடன் உறவில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இருவரும் திருமணமானவர்களா இல்லையா என்பது இன்னும் தெளிவாகத் தெரியாத நிலையில், நடிகை ஒருமுறை இன்ஸ்டாகிராம் பதிவில் "எப்போதும் சிறந்த கணவர்" என்று நீபோனைக் குறிப்பிட்டிருந்தார்.

பிரிவு குறித்து இலியானா

அவர் 2019 இல் அந்த உறவில் இருந்து பிரிந்தார். அவர் பிரிந்த சில மாதங்களுக்குப் பிறகு, அது குறித்து பிங்க்வில்லா நேர்காணலில் பேசினார், “நான் வருத்தப்படுவதில்லை. இதுபோன்ற சூழ்நிலையை கடந்து செல்லும்போதுதான், உங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் மதிப்பை நாம் உணர்கிறோம். எனக்கும் அதேதான் நடந்தது. எனது குடும்பத்தினரும் நெருங்கிய நண்பர்களும் எனக்கு மிகவும் ஆதரவாக இருந்தனர்," என்று அவர் கூறினார். சமீபத்தில், இலியானா கத்ரீனா கைஃப்பின் சகோதரர் செபாஸ்டியன் லாரன்ட் மைக்கேலுடன் டேட்டிங் செய்வதாக தகவல் வெளியானது. காஃபி வித் கரண் சீசன் 7 இன் எபிசோட் ஒன்றில், கரண் ஜோஹர் அவர்களின் உறவை உறுதிப்படுத்தியதாகத் தெரிகிறது, ஆனால் அதிகாரப்பூர்வமாக அவர் எங்கும் இதுகுறித்து அறிவிக்கவில்லை.