புற்றுநோயால் காலமான பாடகர் பவதாரிணியின் உடல் இறுதி சடங்கிற்காக இலங்கையில் இருந்து சென்னை வந்து சேர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


பவதாரிணி


இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளும் பிரபல பின்னணிப் பாடகியுமான பவதாரிணி (Bhavatharini) நேற்று (ஜன.25) காலமானார். 47 வயதான பவதாரணி (Bhavatharini) புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த நிலையில், இலங்கைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால் சிகிச்சைப் பலனின்றி நேற்று மாலை 5.30 மணிக்கு அவர் உயிரிழந்த நிலையில், பவதாரிணியின் மறைவு ஒட்டுமொத்த தமிழ் திரையுலகையும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


தமிழ் திரையுலகினர் அவரது இறப்புக்கு தங்களது இரங்கலைத் தெரிவித்து வருகிறார்கள். அவரது இறுதிசடங்கு சென்னையில்  நடைபெற இருக்கிறது. இந்நிலையில் அவரது பூத  உடல் ஏர் லங்கா விமானம் மூலம் சென்னை வந்து சேர்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அனைத்து சம்பிரதாயங்களும் முடிந்த பின்  சென்னை தியாகராய நகரில்  இளையராஜாவின் இல்லத்தில் அவரது உடல் மாலை ஐந்து மணிக்கு  இறுதி அஞ்சலிக்காக வைக்கப் பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன. இளையராஜா இல்லத்தில் இசையமைப்பாளர் கங்கை அமரனின் மகன் பிரேம்ஜி மற்றும் இயக்குநர் பாரதிராஜா மகன் மனோஜ் ஆகியோர் ஏற்கனவே சென்றடைந்துள்ளார்கள்.  அவரது உடலுக்கு  தமிழ் சினிமாவில் இருக்கும் பிரபலங்கள் அஞ்சலி செலுத்த ஏற்பாடுகள் செய்யப் பட்டு வருகின்றன. இரவு 10 மணி வரை பவதாரணியின் உடலுக்கு அஞ்சலி செலுத்த முடிவு செய்யப் பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. 


திரையுலக பிரபலங்கள் அஞ்சலி செலுத்தியப் பின் பவதாரிணியின் உடல் தேனியில் பன்னைப்புரத்தில் நல்லடக்கம் செய்யப்பட இருப்பதாகவும் இதற்கான ஏற்பாடுகளை செய்ய இளையராஜா முன்னதாக தேனி செல்ல இருப்பதாக தகவல்கள் கூறப்படுகின்றன.


இசையுலகத்திற்கு பேரிழப்பு


இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளும் பிரபல பின்னணிப் பாடகியுமான பவதாரிணி (Bhavatharini) நேற்று (ஜன.25) காலமானார்.


47 வயதான பவதாரணி (Bhavatharini) புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த நிலையில், இலங்கைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால் சிகிச்சைப் பலனின்றி நேற்று மாலை 5.30 மணிக்கு அவர் உயிரிழந்த நிலையில், பவதாரிணியின் மறைவு ஒட்டுமொத்த தமிழ் திரையுலகையும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


கடந்த 1976ஆம் தேதி ஜூலை 23ஆம் தேதி இசையமைப்பாளர் இளையராஜா - ஜீவா  தம்பதியினருக்கு கார்த்திக் ராஜா, யுவன் ஷங்கர் ராஜா ஆகியோருக்கு அடுத்து மூன்றாவது வாரிசாக பிறந்த பவதாரணி, தனது ஏகாந்தமான குரலால் தன் சிறு வயது முதலே தமிழ் சினிமா ரசிகர்களை கட்டிப்போட்டவர்.


ரமணர் பாடல்கள் பாடி மெய்மறக்கச் செய்வது, மயில் போல பாடலுக்கு தேசிய விருது என சாதனைகளுடன் தன் இசைப் பயணத்தை சிறு வயதில் தொடங்கிய பவதாரணி, தமிழ், தெலுங்கு, இந்தி படங்களுக்கு இசையமைத்துள்ளார். நீண்ட காலத்திற்குப் பின்னர் இவர் சமீபமாக மூன்று படங்களுக்கு இசையமைக்க ஒப்பந்தமாகியிருந்தாதாக கூறப்படுகின்றது.