பவதாரிணி


இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளும் பிரபல பின்னணிப் பாடகியுமான பவதாரிணி (Bhavatharini) நேற்று (ஜன.25) காலமானார். 47 வயதான பவதாரணி (Bhavatharini) புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த நிலையில், இலங்கைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால் சிகிச்சைப் பலனின்றி நேற்று மாலை 5.30 மணிக்கு அவர் உயிரிழந்த நிலையில், பவதாரிணியின் மறைவு ஒட்டுமொத்த தமிழ் திரையுலகையும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


கடந்த 1976ஆம் தேதி ஜூலை 23ஆம் தேதி இசையமைப்பாளர் இளையராஜா - ஜீவா  தம்பதியினருக்கு கார்த்திக் ராஜா, யுவன் ஷங்கர் ராஜா ஆகியோருக்கு அடுத்து மூன்றாவது வாரிசாக பிறந்த பவதாரணி, தனது ஏகாந்தமான குரலால் தன் சிறு வயது முதலே தமிழ் சினிமா ரசிகர்களை கட்டிப்போட்டவர். ஈடு செய்ய முடியாத அவரது இழப்புக்கு ரசிகர்கள் மட்டும் திரையுலகினர் தங்களது இரங்கலைத் தெரிவித்து வருகிறார்கள். 


மாரி செல்வராஜ்


இயக்குநர் மாரி செல்வராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் அவருக்கு தனது அஞ்சலியைத் தெரிவித்ததுடன் ஒரு அழகான ஓவியத்தையும் பகிர்ந்துள்ளார். 











ஏ.ஆர் ரஹ்மான்


பாடகி பவதாரிணி மறைவுக்கு ஏ.ஆர். ரஹ்மான் தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார். தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் “மயிலிறகாய்த் தமிழர் மனதையெல்லாம் வருடிய பவதாரிணியின் மதுரமான குரல் இன்றும் ஆகாயத்தில் மலர்கிறது. காற்றெல்லாம் தீரா அதிர்வெழுப்பிக் ககனவெளியெங்கும் கதிரொளியாய் விரிகிறது. இசைஞானி இளையராஜா, யுவன் சங்கர் ராஜா, கார்த்திக் ராஜா  இந்த துனபகரமான வேளையில் நாங்கள் உங்களுடன் இருக்கிறோம்” என்று ரஹ்மான் ட்வீட் செய்துள்ளார்.