திரையிசை என்பதன் அடையாளமாக விளங்குபவர் இசைஞானி இளையராஜா. அவரின் இசையை கேட்டு மயக்கத்தில் வீழ்ந்த ரசிகர்களால் என்றுமே எழ முடியாத அளவுக்கு கிறக்கத்தில் இருக்கிறார்கள். அது அவருக்கே உரித்தான தனி சிறப்பு. அப்படி பட்ட மாபெரும் இசை கலைஞனின் இளைய மகன் யுவன் ஷங்கர் ராஜாவும் தமிழ் சினிமாவில் ஒரு சிறந்த இசையமைப்பாளராக வலம் வருகிறார். கடந்த 20 ஆண்டுகளாக யுவன் ஷங்கர் ராஜாவும் தன்னுடைய தனித்துமான இசையால் எண்ணற்ற ரசிகர்களை தன் பிடிக்குள் அடக்கி வைத்துள்ளார். அந்த வகையில் இருவரும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது நடைபெற்ற ஸ்வாரஸ்யமான நிகழ்வின் வீடியோ ஒன்று சோசியல் மீடியாவில் மிகவும் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.
அதில் யுவன் ஷங்கர் ராஜா தன்னுடைய தந்தையிடம் "இப்போ எனக்கு ஏதாவது அறிவுரை கொடுக்க வேண்டும் என நீங்கள் நினைத்தால் என்ன கொடுப்பீர்கள் என என்னை கேட்க சொன்னார்கள்" என தன்னுடைய கேள்வியையே ஸ்வாரஸ்யமாக கேட்க அதற்கு பதில் அளித்த இசைஞானி இளையராஜா "நான் உனக்கு ஏதாவது அட்வைஸ் கொடுக்க வேண்டும் என்றால் எலக்ட்ரானிக் சாதனங்களை பயன்படுத்தி மியூசிக் செய்வதை விட்டுவிட்டு ரியல் இசை கலைஞர்களை பயன்படுத்தி மியூசிக் செய்ய வேண்டும் என்பதுதான்.
இப்போது நீங்கள் கேட்டு கொண்டு இருக்கும் அனைத்து இசையுமே எலக்ட்ரானிக் சாதனத்தை பயன்படுத்தி வரும் இசையை மட்டும் தான். அது உங்களுடைய மூளையின் செல்களில் திணிக்கப்படும். அதனால் அவற்றால் சரியாக செயல்பட முடியாது. பர்ஃபார்மன்ஸ் இல்லாத எந்த ஒரு கலையும் கலையே கிடையாது" என பேசி இருந்தார். அருமையான எமோஷன் கொண்ட ஒரு தரமான இசையின் அவசியம் பற்றி அழகாக கதை சொன்னார் இசைஞானி இளையராஜா.
இளையராஜா சொன்னதுபோல இன்று நாம் கேட்கும் பெரும்பாலான இசை எலக்ட்ரானிக் முறையில் தான் வெளிவருகிறதே தவிர அந்த காலத்தில் இசை கலைஞர்களின் ட்ரூப் மூலம் வாசித்த காலம் குறைந்துவிட்டது. அதனால் தான் அன்றைய இசை காலங்களை கடந்து மனதில் பதிந்துள்ளது.
எமோஷனலாகவும் அனைவருடனும் கனெட் செய்ய முடிவது தான் அதன் பலம். அத்தகைய ஒரு இசை இந்த காலகட்டத்தில் மிஸ்ஸிங்.