அறிவு
ராப் இசை தமிழ் படங்களில் நீண்ட காலமாக பயண்படுத்தப் பட்டு வருகிறது என்றாலும் ராப் இசையை, அதன் வரலாற்று முக்கியத்துவத்துடன் சேர்த்து பயண்படுத்தியவர்களில் அறிவும் ஒருவர். ஒடுக்குமுறைக்கு எதிராக கருப்பின மக்கள் மிகப்பெரிய ஆயுதமாக பயன்படுத்திய ஒரு கலை வடிவம் ராப் இசை. இதனை உதாரணமாக கொண்டு சாதிய ஒடுக்குமுறைக்கு எதிரான வரிகளை தனது பாடல்களில் வைத்து உருவாக்கினார் அறிவு. அரசியல் தவிர்த்து கமர்ஷியல் படங்களிலும் அறிவு எழுதி பாடிய பாடல்கள் மிகப்பெரிய ஹிட் அடித்துள்ளன. மாஸ்டர் படத்தில் வாத்தி ரைடு படம் ஒரு நல்ல உதாரணம்.
விஜயின் தவெக கட்சியின் கொள்கைப் பாடலை அறிவு இசையமைத்து பாடியுள்ளார். சமீபத்தில் அறிவு தனது பிறந்தநாளை முன்னிட்டு “ வள்ளியம்மா பேராண்டி” என்கிற 12 பாடல்களைக் கொண்ட ஆல்பத்தை வெளியிட்டார். இந்த பாடல்கள் அனைத்தும் அனைத்து தரப்பு ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்று வருகின்றன
காதலியை திருமணம் செய்த அறிவு
இன்று அறிவு தனது காதலியை திருமணம் செய்துகொண்டார். சென்னை டாக்டர் அம்பேத்கர் மணிமண்டபத்தில் அவரது திருமணம் நடைபெற்றது இந்த திருமணத்தில் விசிக தலைவர் தொல் திருமாவளவன் மற்றும் இசையமைப்பாளர் இளையராஜா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்கள். திருமணம் முடிந்த கையோடு அம்பேத்கர் பற்றி ராப் பாடலை அறிவு பாடினார். அறிவு திருமண புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.