சிங்கீதம் சீனிவாச ராவ்


கமல் நடித்த பேசும்படம் , அபூர்வ சகோதரர்கள் , மைக்கல் மதன காமராஜன் , ராஜபார்வை உள்ளிட்ட பல்வேறு படங்களை இயக்கியவர் சிங்கீதம் சீனிவாசன்மூத்த இயக்குநர் சிங்கீதம் சீனிவாச ராவின் திரைப்பணியைப் போற்றும் விதமாக ராஜ்கமல் ஃபிலிம்ஸ் சார்பாக நிகழ்வு ஒன்று ஒருங்கிணைக்கப்பட்டது. இதில் இயக்குநர் மணிரத்னம் , நடிகர் நாசர் , இயக்குநர் நாக் அஸ்வின் , இசையமைப்பாளர் இளையராஜா , கமல்ஹாசன் சந்தானபாரதி உள்ளிட்ட பல்வேறு திரைப்பிரபலங்கள் கலந்துகொண்டார்கள். இந்த நிகழ்ச்சியில் இளையராஜாவும் கமலும் ராஜபார்வை படத்தின் போது நிக்ழந்த சம்பவம் ஒன்றை பகிர்ந்துகொண்டாரகள்.


மரத்தை பிடித்து அழுத கமல் , இளையராஜா


" ராஜபார்வை படம் பண்ணலாம் என்று முடிவானப் பின் நானும் இளையராஜாவும்  சேர்ந்து பார்வைற்ற குழந்தைகள் காப்பகத்திற்கு சென்றோம். நாங்கள் இருவரும் அங்கு சென்றதும் அங்கு இருந்த ஆசிரியர் குழந்தைகளிடம் 'யார் வந்திருக்கானு பாருங்க" என்று சொன்னது, ஒரு விதமான வலி ஏற்பட்டது. பின் எங்களுக்காக அந்த குழந்தைகள் அனைவரும் சேர்ந்து ஒரு பாடல் பாடினார்கள். அதை கேட்டு அழுகையை அடக்கமுடியாமல்  நான் ஒரு மரத்தை நோக்கி நடக்க என் பின்னாலேயே இளையராஜாவும் வந்து இருவரும் சேர்ந்து மரத்தை கட்டிப்பிடித்து அழுதோம். நாங்கள் அழுததைப் பார்த்து அங்கு இருந்த சிறுவன் ' நான் ஒரு ஜோக் சொல்லட்டுமா " என்று சொன்னான். அதை கேட்டு எங்களுக்கு இன்னும் தான் அழுகை வந்தது. அதன் பிறகு தான் தெரிந்தது நாங்கள் எவ்வளவு மென்மையான ஒரு கதைக்களத்தை கையாளப் போகிறோம் என்று " என கமல் தெரிவித்துள்ளார்