குட் பேட் அக்லி
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் குமார் நடித்த குட் பேட் அக்லி திரைப்படம் கடந்த ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியானது. அஜித் ரசிகர்களுக்கு மிகப்பெரிய கொண்டாட்டமாக அமைந்துள்ள இந்த படம் இதுவரை 146 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் குட் பேட் அக்லி தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸூக்கு இசைஞானி இளையராஜா தரப்பில் வக்கீல் நோட்டீஸ் அனுப்பப் பட்டுள்ளது. படத்தில் தான் இசையமைத்த பாடல்களை அனுமதியின்றி பயன்படுத்தியதால் 5 கோடி கேட்டு இளையராஜா நோட்டீஸ் அனுப்பியுள்ளார்