தீபாவளிக்கு போன் செய்தால் ஜெய் பொங்கலுக்குத்தான் போன் எடுப்பார் என்று மிர்ச்சி சிவா பேசியுள்ளார்.
Rain of Arrow Entertainment சார்பில் சுரேஷ் சுப்பிரமணியன் தயாரிப்பில், இயக்குநர் S.K.வெற்றி செல்வன் இயக்கத்தில், ஜெய் மற்றும் அதுல்யா ரவி ஆகியோரது நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் “எண்ணித் துணிக”. சாம் சி எஸ் இசையமைப்பாளர் இசையமைத்துள்ள இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடந்தது. இந்த நிகழ்வில் ஜெய், மிர்ச்சி சிவா, அதுல்யா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இயக்குநர் வெற்றிச்செல்வன் இந்தப்படத்தை இயக்கி இருக்கிறார்.
மேடையில் பேசிய மிர்ச்சி சிவா கூறும் போது, “இயக்குநர் என்னை தொடர்ந்து அழைத்து இந்த விழாவிற்கு வரவழைத்தார். தீபாவளிக்கு போன் செய்தால் பொங்கலுக்கு போன் எடுப்பார் ஜெய். போனை அவ்வாறு தான் பயன்படுத்துவார்.
ஜெய் மிகவும் அர்ப்பணிப்பான நடிகர். ஜெய் மிகப்பெரிய உயரத்தை அடைவார். அவருக்கு எனது வாழ்த்துகள். இயக்குநர் கடின உழைப்பாளி என அனைவரும் கூறினர். அவருக்கு எனது வாழ்த்துகள்.” என்று பேசினார்.
நடிகர் ஜெய் பேசும்போது, “ இந்த படத்தின் பெரிய பலம் இசைதான். இந்த படத்தில் முழுக்க முழுக்க அர்ப்பணிப்புடன் பணியாற்றியுள்ளோம். இந்த படத்தின் பெரிய பலம் திரைக்கதைதான். இந்த படத்தில் எனக்கு அதிக ஸ்கோப் இருந்தது. இந்த படத்தில் எனது நல்ல நடிப்பிற்கு முழு காரணமும் இயக்குநர்தான். இயக்குநரின் அர்பணிப்பு எனக்கு மிகப்பெரிய அனுபவமாக இருந்தது. படம் பார்த்துவிட்டு நீங்கள் கூறுங்கள். நன்றி” என்று பேசினார்.
இயக்குனர் வெற்றி செல்வன் கூறியதாவது.. “தமிழ்மொழிக்கு எனது முதல் நன்றியை கூறிகொள்கிறேன். இந்த படத்தை எனக்கு கொடுத்த தயாரிப்பாளர் சுரேஷ் சுப்ரமணியனுக்கு நன்றி. படத்தின் தலைப்பு தயாரிப்பாளருக்கும், விநியோகஸ்தருக்கும் பொருந்தும். இசையமைப்பாளர் சாமுக்கு நன்றி. ஒளிப்பதிவாளர் உடன் பணியாற்றியது சந்தோசம். எனது நண்பன் இந்த படத்தில் எடிட்டராக பணிபுரிந்தது மகிழ்ச்சி. அதுல்யா பெரிய உழைப்பை தந்துள்ளார். நடிகர் ஜெய் இந்த படத்திற்கு பெரிய உழைப்பையும், அர்பணிப்பையும் கொடுத்தார். படத்தை பார்த்து ஆதரவு தாருங்கள் நன்றி“
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்